அன்புள்ள நாங்கள் (நான் மற்றும் என் அண்ணன் சிவா) மதிக்கும் சாருவிற்கு வணக்கம்…
புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டின் போது புதிய எக்ஸைல் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தேன், அப்போது நீங்கள் நான் கையெழுத்து போடுவதில்லை என்று மறுத்துவிட்டு நான்Announce பண்றேன் என்று சொன்னீர்கள்… இந்த நிகழ்வை charuonline.com ல் பதிவு செய்துள்ளீர்கள், இது நான் வந்து உங்களிடம் கையெழுத்து கேட்ட நிகழ்வா அல்லது வேறு வாசகர் யாரேனும் உங்களிடம் கையெழுத்து வாங்க வந்த நிகழவா என்று தெரியவில்லை. நானாக இருக்கும் பட்சத்தில் மிகவும் சந்தோசப் படுகிறேன், பெருமைப் படுகிறேன், என்னை ஞாபகம் வைத்திருந்து இந்த பதிவை போட்டத்திற்காக நான் மிகவும் பெருமை படுகிறேன். என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கக் கூடாது, நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என் வயது இல்லை, உங்களை பார்த்து நான் வளர்ந்தவன், என் கருத்தும், பகுத்தறிவும், உங்கள் எழுத்தை வாசித்ததின் மூலம் எனக்கு கிடைத்தது, நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க்கும் அளவிற்க்கு பெரிய அளவில் நான் இல்லை, என்னை நினைவில் வைத்திருந்ததே எனது மிக பெரிய பாக்கியம்…. நன்றி… உங்கள எப்படி அழைப்பது என்று என்க்கு தெரியவில்லை, ஐயா என்று கூப்பிட எனக்கு மனமில்லை, சார் என்று அழைத்து சொல்லி இடைவெளி கொடுக்க விரும்பவில்லை, எனக்கு அப்பா இல்லை, நான் உங்களால் வளர்ந்தவன் என்பதால் உங்களை நான் அப்பா என்று அழைப்பதற்கே என் மனம் எனக்கு இடம் கொடுக்கிறது… நன்றி அப்பா, இது சரி, இது தவறு என்று தெரியாமால் எழுதிவிட்டேன் ஏதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்….
இப்படிக்கு
மோகன்
டியர் மோகன்,
நீங்கள் என்னை உங்கள் விருப்பப்படியே அழைக்கலாம். உங்களை ஞாபகம் மட்டும் வைத்திருக்கவில்லை. என் முடிவையே மாற்றிக் கொள்ளவும் செய்தேன். என்னால் ஒரு முகம் கூட வாடி விடக் கூடாது. நீங்கள் எந்த ஊர்? புத்தக விழாவுக்கு தினமும் வருவேன். அங்கே நீங்கள் வந்தால் கையெழுத்துப் போடுவேன்.
மற்ற வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். டயரி, துண்டுப் பேப்பர், டிக்ஷனரி, மற்ற எழுத்தாளர்களின் நூல்கள் போன்றவற்றில் எல்லாம் கையெழுத்துப் போட மாட்டேன். என் புத்தகங்களில் மட்டுமே போடுவேன். இந்த முடிவால் உங்கள் முகம் வாடினால் நான் அதற்குப் பொறுப்பு அல்ல…
சாரு