சாரு!
‘’நிறைய காதலும் நிறைய சிரிப்பும் மட்டும் இல்லையென்றால் பீடை பிடித்த இந்த சமூகத்தில் வாழவே முடியாது’’ என்றார்தருண் தேஜ்பால். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த இரண்டும் இல்லாவிட்டால் நான் போனவாரமே தூக்கில்தொங்கியிருப்பேன். தருண் தேஜ்பால் என்பவர் யாரு தெரியுமா? தெகல்கா இதழின் எடிட்டர். ஆங்கில இலக்கிய உலகின்பிரபலமான எழுத்தாளர். பாலியல்குற்றச்சாட்டில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்திருப்பவர். அதிகார மையத்திற்கு எப்போதும்அணுக்கமில்லாதவர். அப்படிப்பட்ட ஒருவரை தன்னுடைய நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க அழைக்கிற ‘’தில்’’சாருவைத்தவிர வேறு யாருக்கும் தமிழ்நாட்டில் இருக்குமா தெரியவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களால்தான் இன்னமும்என்னைப்போன்றவர்கள் சாருவுக்கு வாசகர்களாக இருக்கிறோம்.
‘’புதிய எக்ஸைல்’’ என்கிற சாருநிவேதிதாவின் புதிய நாவல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஏற்பாடுகளெல்லாம்பிரமாதமாக செய்திருந்த போதும் ஏதோ குறைகிற உணர்வு.
சென்ற ஆண்டுகளைப்போல் இல்லாமல் உற்சாகமும் கொண்டாட்ட உணர்வும் பரவலாக இல்லாத ஒரு விழாவாகவே இந்தவிழா இருந்ததால் அப்படி தோன்றி இருக்கலாம். அதோடு சென்ற ஆண்டில் பார்த்த பல முகங்களை பார்க்க முடியாமல்போனதாலும் இருக்கலாம். இவ்விழாவைப்போலவே கடந்த ஆண்டுகளில் சாருவின் எழுத்திலும் உற்சாகமும்கொண்டாட்டமும் குறைந்துவிட்டிருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
சென்றவாரத்தில் ஒருநாள் சாருவின் நிறைய பழைய நூல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு நூலில் தன்னுடையவாசகர்களின் கேள்விக்கு பதில்களை அள்ளி அள்ளிக்கொடுத்திருந்தார் சாரு. ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும்தகவல்களும் நக்கலும் நையாண்டியும் பகடியும் அசலான வீரமுமாக தில்லுதுரையாக வாழ்ந்திருக்கிறார் மனிதர். பக்கத்துக்குபக்கம் அதகளம் பண்ணியிருக்கிறார். (நூலின் பெயர் – அருகில் வராதே – உயிர்மை வெளியீடு )
இந்நூலில் சாருவுக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிற அனேகர் இன்று எழுத்தாளர்களாக உயர்ந்து சாருவையே வசைமாறிபொழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
அந்த எழுத்தில் நிறைந்திருந்த அந்த உற்சாகமும் ஆவேசமும் வேகமும் இப்போது சாருவிடம் குறைந்துவிட்டதோ என்றுதோன்றுகிறது. 2008சமயத்தில் சேகுவாரா (சே கபாரா) போலிருந்த சாரு இன்று கிருபானந்த வாரியார் போலாகிவிட்டாரோஎன்று கவலையாக இருக்கிறது. மிகக்குறைந்த காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்த அவருடைய மோடி அல்லது பிஜேபி ஆதரவு, தொடர்ச்சியானஆன்மீக பிரசங்கங்கள் , அரசியல் நோக்கங்கள் என அவருடைய அஸ்திவாரத்தின் ஒவ்வொரு கல்லும்மாற்றத்திற்குள்ளாகியிருக்கின்றன. இது பெரும்பாலான அவருடைய வாசகர்களான நாத்தீக மற்றும் இடதுசாரி மற்றும்திராவிட அரசியல் பின்புலமுள்ளவர்களை அவரிடமிருந்து முற்றிலுமாக விலக்கியிருக்கிறது. இதை சாருவிடம்சொல்வதற்கு அத்தகைய யாருமே அவருக்கு மிக அருகில் இப்போது இல்லை என்பது வருத்தமான உண்மை.
அவரோடு சமகாலத்தில் நெருங்கிப்பழகுகிற நண்பர்கள் எல்லோருமே இந்துத்துவா அரசியலையும் பார்ப்பனர் நலனையும்முன்வைக்கிற அரசியலை பேசுகிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயம். சாரு துக்ளக்கில்எழுதிய போது அதற்காக மிகுந்த மனவேதனையடைந்த எத்தனையோ வாசகர்களை நானறிவேன்.
எங்களுக்கு தெரிந்த சாருவின் இயல்பு மோடி – இந்துத்துவ – பார்ப்பன ஆதரவுடையதல்ல அது சிறுபான்மையினர்ஒடுக்கப்பட்டோர் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல் சார்புடையது. அது ஆதிவாசிகளுக்காகவும் மலம்அள்ளுகிறவர்களுக்காகவும் துடிக்கிற கசிகிற இதயம் கொண்டவர் சாரு.
ஆனால் எங்கோ சாரு வழிதவறிவிட்டார். அவருடைய இதயம் இன்னமும் அப்படியே துடித்துக்கொண்டிருந்தாலும்அவருடைய எழுத்தில் தொடர்ந்து அதற்கு நேர்மாறான விஷயங்கள் பதிவாகின்றன.
இணையத்தில் ஜெயமோகனின் ஒரே ரிவல்ரியாக இருந்த ஒரு மனிதர் சடாலென இன்று விஷ்ணுபுர வாசகர் வட்ட ஆட்களில்ஒருவராகவே மாறிவிட்டது போல் அவருடைய எழுத்து மாற்றம் பெற்றிருக்கிறது. ஜெயமோகனை தம்பியென்கிறார். உத்தமதமிழ் எழுத்தாளனை மறந்துவிட்டார். புதுமையும் இளமையும் துள்ளலும் காமமும் காதலும் காத்திரமும் நிறைந்திருந்தசாருவின் எழுத்துகளில் பழமையும் வரலாற்று விஷயங்களும் கூடி கும்மியடிக்கின்றன.
அவருக்கு பர்சனலாக அதிமுக ஆட்சி ஆதரவு இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் என்னென்னவோ கூத்துகள் தொடர்ந்துநம்மைசுற்றி நடக்க அவருக்கு அதன் மீது எந்த விமர்சனமும் இல்லாமலிருப்பதும் எவ்வளவு விந்தையானது.
இந்த மாற்றம்தான் சாருவின் வாசகர்களை அவரிடமிருந்து பிரிக்கிறது. சாரு யாருக்கும் அஞ்சாதவர், எந்த சமரசத்திற்கும்ஒப்புக்கொள்ளாதவர், காத்திமான எழுத்துகளுக்கான அடையாளம் அவர்தான், அவருடைய தைரியம் யாருக்குமே கிடையாதுஎன்கிற பிம்பம்தான் என்னைப்போன்ற அவருடைய வாசகர்களுக்கு உண்டு. ஆனால் சாரு இன்று அப்படி இல்லை. அவரிடம்கோபம் இல்லை. அவர் ஒரு கருணைமிகு ஞானியைப்போல மாறிவிட்டார். எதற்கும் சீற்றம் கொள்கிறவராக அவரில்லை
சாருவின் எழுத்துகளின் வழிதான் எங்களுக்கு அனுராக் காஷ்யபையும் விஷால் பரத்வாஜையும் தெரியும். சாருவின்வழிதான் சினிமாவை எப்படி பார்ப்பது என நாங்கள் கற்றுக்கொண்டோம். இலக்கிய உலகத்தின் கதவுகளை அவரேதிறந்துவைத்தார். அவருடைய கட்டுரைகளின் வழிதான் இணையத்தில் தமிழின் புதிய எழுத்து பாணியை நாங்கள்அறிந்தோம். அவரை பின்பற்றியே நாங்கள் எழுதினோம். அவருடைய எழுத்துகளின் வழிதான் பல்வேறு முற்போக்குஎழுத்தாளர்கள் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் அறிந்துகொண்டோம்.
எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் என சாரு அறிமுகப்படுத்திய பகிர்ந்துகொண்டபடைப்புகள் மற்றும் படைப்பாளிகள் பெயரை பட்டியலிட்டால் நூறுபக்கத்திற்கு ஒருநூலாகவே அதை வெளியிட முடியும்.அப்படிப்பட்ட சாருவைதான் எங்களுக்கு தெரியும். தருணை தன் நூல் வெளியீட்டு விழாவுக்கு மேடையேற்றுகிற அந்தசாருதான் எங்களுக்கு எழுத்திலும் வேண்டும். அந்த சாருவிற்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
– – athisha