புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (8) : Fuck

வார்த்தைகளில் எனக்குக் கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை என்று எதுவும் கிடையாது.  என் 30-ஆவது வயதில் ஒரு கருத்தரங்கில் Germaine Greer நடத்திய CUNT என்ற பத்திரிகையிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன்.  பெண்கள் தமது யோனியைக் கொண்டாட வேண்டும் என்பது க்ரேரின் கோட்பாடு.  அவருடைய The Female Eunuch என்ற நூலை உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.  பின்னால் இருப்பது ஜெர்மெய்ன் க்ரேர் பெருமையாகக் கொடுத்த அவருடைய புகைப்படம்.  மேலும் அவரைப் பற்றிய, அவர் எழுதிய விஷயங்களை நீங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

http://www.elephantjournal.com/2012/03/germaine-greer-on-the-c-word/

இன்றைய தினம் கணினி, இண்டெர்நெட் உதவியால் நீங்கள் ஒரு வினாடியில் ஜெர்மெய்ன் க்ரேர் பற்றி அறிந்து கொண்டு 300 பக்கத்தில் ஒரு புத்தகத்தை மூன்று நாளில் எழுதி புத்தக விழாவில் வெளியிட்டு விடலாம்.  30 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மெய்ன் க்ரேர் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களையும் அடைவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஒப்பாகும்.  இன்றும் க்ரேரின் புத்தகங்கள் என்னிடம் உள்ளன.  ஆனால் அவரையெல்லாம் நான் தாண்டி வந்து விட்டேன் என்பதால் க்ரேர் இப்போது எனக்குத் தேவையில்லை.  ஆனால் சில மூடர்கள் எனக்கு என் இளமைப் பிராயத்தையும் ஜெர்மெய்ன் க்ரேரையும் ஞாபகப் படுத்துகிறார்கள்.   நான் கெட்ட வார்த்தை பேசியதை/எழுதியதை பலருக்கும் ஷேர் செய்து மகிழ்கிறார்கள் மூடர்கள்.  அவர்களைப் பற்றி எனக்குத் துளியும் கவலை இல்லை.  அவர்கள் என் எழுத்தில் ஒரு வாக்கியத்தைக் கூடப் படிக்காதவர்கள்.  ஆனால் என்னை என்னுடைய வளர்ப்பு மகன் என்று நான் கருதும் ஒருவரின் இல்லத்தில் வாரம் தோறும் பார்த்து எனக்கு வணக்கம் போடும் ஒரு பொடியனும் என்னுடைய “அசிங்கத்தை” பலருக்கும் தெரிவிக்க வேண்டி என் கெட்ட வார்த்தைப் பதிவை பலருக்கும் ஷேர் செய்திருக்கிறான்.  அடுத்த முறை அவன் எனக்கு வணக்கம் போட்டால் செருப்பைக் கழற்றி அடிக்கலாம் என்று இருக்கிறேன்.  என்னை அவமானப்படுத்த நினைப்பவர்கள் எனக்கு வணக்கம் போட்டு இளித்தால் செருப்படி தான்.  என்னை எதிரியாக நினைக்க உனக்குப் பூரண உரிமை இருக்கிறது.  ஆனால் கிட்டத்தில் வந்து என்னிடம் பல் இளிக்காதே.

நான் என்னை ஒரு ஞானியாக உணர்கிறேன்.  இது தற்பெருமை அல்ல.  அப்படி உங்களுக்குத் தெரிந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  ஆசைகளை அறுத்த எவனும் ஞானி தான்.  எனக்கு எந்த ஆசையும் கிடையாது.  உயிர் மீது கூட ஆசை கிடையாது.  ஒரே ஒரு விதிவிலக்கு… என் நாவல்கள் ராஸ லீலாவும், புதிய எக்ஸைலும் ஆங்கிலத்தில் வர வேண்டும்.  இதைத் தவிர இந்த உலகத்துக்கும் எனக்கும் எந்த பந்தமும் கிடையாது.  இப்படி ஆசை அறுத்த பலரை திருவண்ணாமலையிலும் இமயமலையிலும் பார்த்திருக்கிறேன்.  ஆனால் ஜீன்ஸ் அணிந்து குளிர் கண்ணாடி அணிந்த ஒருவனை வேறு எங்கும் பார்த்ததில்லை.  இப்படி ஞானியாகத் தன்னை உணரும் ஒருவன் எப்படிக் கெட்ட வார்த்தை பேசலாம்?  செருப்பால் அடிப்பேன் என்று சொல்லலாம்?  ஷீர்டி பாபாவின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள்.  பதில் தெரியும்.  பைபிளிலும் பதில் உள்ளது.

Screen-shot-2012-03-08-at-10.20.57-PM

 

30 வயதில் ஓஷோவின் ஒரு உரையை ஐந்து நிமிடம் கேட்டேன்.  நான் பேசியது போல் இருந்தது.  அதிலிருந்து ஓஷோவைக் கேட்பதையோ படிப்பதையோ தவிர்த்து விட்டேன்.  இதோடு சுமார் நூறு பேராவது என்னிடம் சொல்லியிருப்பார்கள்… ஓஷோவின் கருத்தும் என் கருத்தும் ஒன்றே போல் இருப்பதாக.  அந்தக் காரணத்தினாலும் அவரை நான் தவிர்த்தேன்.  என்னைப் போல் இருக்கும் ஒருவன் நூறு ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கிறான், நாம் ஆட்டோவில் போகிறோமே என்ற பொறாமையே காரணம்.  ஆனால் அவனுடைய துறை ஆன்மீகம்; என்னுடைய இலக்கியம்.  புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

புதிய எக்ஸைலில் புண்டை என்ற வார்த்தையின் மொழிப் பயன்பாடு பற்றி ஏழெட்டு பக்கம் எழுதியிருக்கிறேன்.  ஓஷோவும் அதேபோல் fuck என்ற வார்த்தை பற்றி ஐந்து நிமிடம் பேசியிருக்கிறார்.  கேட்டு ரசியுங்கள்.  நண்பர் கோகுல் அனுப்பினார்.

https://www.youtube.com/watch?v=fUsTTa5inbs