மலேஷிய பயணம் (3)

மலேஷிய பயணம் (2)க்கு அராத்து எழுதியிருக்கும் எதிர்வினை பின்வருவது:

பல மலேஷிய நண்பர்களும் சிங்கப்பூர் நண்பர்களும் 4 வருஷமா உங்களைப் பாக்க துடியா துடித்து போனில் பேசிக் கொண்டே இருந்ததை கதறக் கதற உடனிருந்து பார்த்தவன் நான். பினாங்குக்கு வந்து ஒரு வாரம் இருந்தே ஆகணும் என்று ஒருவர் தலைகீழ் நின்றார்.
www.bestessaysforsale.net 
இப்போ மேட்டர் க்ளியர் . மலேஷிய திருமணம் முடிச்சிட்டு , கம்போடியா போகலாம். 5 நாள் அங்க தேவையான்னு மட்டும் பாக்கணும். 

இந்த முறை வெட்டி வேலை (!) பாக்காம ஃபுல்லா சுத்தல் சுத்தல் சுத்தல்தான்.

***

Albetross என்ற ஒரு பயண நிறுவனத்தின் மூலம்தான் துருக்கி போனேன்.  ஒரு மாதம் சுற்ற வேண்டியதை பத்தே நாளில் முடிக்க முடிந்தது.  அவர்கள் மூலமாகக் கம்போடியா செல்லலாம்.  மலேஷிய, சிங்கப்பூர் அனுபவத்தின் காரணமாகத்தான் துருக்கி செல்வதை யாரிடமும் சொல்லவில்லை.  நாம் தங்கியிருக்கும் விடுதியின் பெயரைச் சொன்னால் நம்மோடு வந்து பேசி விட்டு லஞ்ச் வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.  அவர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும் நாலெட்ஜ் நமக்கு லாபம் என்று எடுத்துக் கொண்டால் அதைச் செய்யலாம்.  நாமோ சல்லடை.  எந்த நாலெட்ஜும் தங்காமல் வெளியே போய் விடும்.  கம்போடியாவா அல்லது இந்தோனேஷியாவா என்று முடிவு செய்ய வேண்டும்.  பாலி போன்ற டூரிஸ்ட் இடங்கள் வேண்டாம்.  கம்போடியாவில் அங்க்கோர் வாட் ஈர்க்கிறது.  நேரில் திட்டமிடுவோம்.

Comments are closed.