மரண தண்டனை

மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இந்தியா நாகரீகம் அடையவில்லை. ஒரு பெண் தனியாக வெளியே போனாலே ஏழெட்டு பேர் சேர்ந்து வன்கலவி செய்து கொல்லும் அளவுக்கு எதார்த்தத்தைக் கொண்ட இந்த நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என எப்படிச் சொல்வது?   மிகவும் யோசித்து, மிகவும் திட்டமிட்டு ஒருவரைக் கொலை செய்த ஒரு மனிதனுக்கு இந்தப் பூமியில் வாழ என்ன உரிமை இருக்கிறது?   அதிலும் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 257 பேர்.  படுகாயம் அடைந்தவர்கள் 713.  இந்தக் கொலைச் செயலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு பெற்ற யாகூப் மேமனுக்கு இந்த உலகில் வாழ என்ன தகுதி இருக்கிறது?  மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் இது போன்ற கேள்விகளுக்குச் சொல்லும் பதிலில் நியாயமோ தர்க்கமோ எதுவும் இல்லை.  மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ நேர்ந்தால் நானும் மரண தண்டனைக்கு எதிராகவே எழுதுவேன்.  துரதிர்ஷ்டவசமாக நான் வாழ்வது இந்தியாவில்.  யாகூப் மேமன் தூக்குத் தண்டனை குறித்த சமஸின் கட்டுரையை முக்கியமானதாகக் கருதுகிறேன்.  பிறந்த நாள் அன்று அவரைத் தூக்கில் போட்டதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் தெரியவில்லை.  மரண தண்டனை என்று வந்து விட்ட பிறகு நாள் என்ன கோள் என்ன?

http://writersamas.blogspot.in/2015/07/blog-post_51.html?m=1#more