கிடைத்தால் வரம்; கிடைக்கா விட்டால் சாபம். தஞ்சாவூர் மாவட்டத்து மண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 62 வயதிலும், ஓடினால் நெஞ்சு வலி என்ற நிலையிலும் பித்தோ இது எனத் தோன்றும் காமம் பொங்கிப் பெருகும் தேகம் தஞ்சை மண்ணுக்கே உரியது. அதிலும் பனிரண்டு மணி நேரப் படிப்பில் தேகம் சுழித்து நுரைக்கிறது. மதுவையும் விட்ட பிறகு உணர்வுகளை மழுங்க அடிக்க எதுவும் இல்லாத நிலையில்… உணர்வுகள் கூர்மை பெற்று ஓங்கிப் பெருகுகின்றன. சிருஷ்டிகரமான பணிக்கும் காமத்துக்கும் அதிகப் பிணைப்பு போலும். அதிலிருந்து மீள பின்வரும் பாடல்களில் சற்றே இளைப்பாறினேன்.
- அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
- இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே – வீரபாண்டிய கட்டபொம்மன்
- பூஜைக்கு வந்த மலரே வா – பாத காணிக்கை (இது ரொம்பப் பிடித்த பாடல்)
- ஓஹோ எந்தன் பேபி – தேன் நிலவு
- நெஞ்சம் மறப்பதில்லை – நெஞ்சம் மறப்பதில்லை
- முத்தான முத்தல்லவோ
- நிலவே என்னிடம் மயங்காதே
- பாட்டு பாட வா – தேன் நிலவு
- காற்று வெளியிடைக் கண்ணம்மா
- மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
- வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் – காத்திருந்த கண்கள்
- கண் படுமே பிறர் கண் படுமே (பாடல் முழுவதும் பி.பி.ஸ்ரீனிவாஸ் கண் baடுமே என்றே பாடியிருக்கிறார். இருந்தாலும் அந்தத் தேன்குரலுக்காக மன்னிக்கலாம்.)
- காற்று வந்தால் தலை சாயும் நாணல் – காத்திருந்த கண்கள் இந்தப் பாடலின் மேற்கத்திய பாணி ரிதத்தை அடித்துக் கொள்ளவே முடியாது. அற்புதம்.
- நினைக்கத் தெரிந்த மனமே – ஆனந்த ஜோதி
- பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து – ஆனந்த ஜோதி
- அவள் பறந்து போனாளே – இந்தப் பாடலில் சிவாஜியின் நடிப்பைப் பார்க்கும் போது உலகப் புகழ் பெற்றிருக்க வேண்டிய ஒரு நடிகர் தமிழ்நாட்டில் பிறந்ததால் இங்கே மட்டுமே தெரிய வந்தாரே என்று தோன்றுகிறது. என்ன ஒரு stylised acting.
- சொன்னது நீ தானா? – நெஞ்சில் ஓர் ஆலயம்.
- கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
- யாருக்கு மாப்பிள்ளை யாரோ
- காதலிக்க நேரமில்லை படத்தில் எட்டு பாடல்கள் உண்டு. அவை அனைத்தும்.
28. Through the fire and flames (piano)
www.youtube.com/watch?v=2IIlBrx3GXI&list=RD2IIlBrx3GXI
29. Paradise (Peponi)
www.youtube.com/watch?v=Cgovv8jWETM&index=11&list=RD2IIlBrx3GXI
30. Christina Perri – A thousand years (Piano)
www.youtube.com/watch?v=QgaTQ5-XfMM&list=RD2IIlBrx3GXI&index=16
31. Song For Sara – By Greg Baker
www.youtube.com/watch?v=YkdZTWc1wAQ&index=36&list=RD2IIlBrx3GXI
32. Sad Piano – Michael Ortega
www.youtube.com/watch?v=a_Am4cHMBKM&index=14&list=RD2IIlBrx3GXI