சுந்தர் பிச்சை

அன்புக்குரிய நண்பர் பி.ஏ. கிருஷ்ணனின் முகநூலில் பின் வரும் குறிப்பைக் கண்டேன்.  அவருடைய கருத்தில் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்.  பல ஆண்டுகளாக இதைத்தான் நான் சொல்லி வருகிறேன்.

I had always had the suspicion that Tamil Nadu had a sizable share of persons who suffered from serious brain damage but were allowed to roam about freely in the cyberspace, especially the Facebook. My suspicion was fully confirmed today when I read some of the entries on the appointment of Sunder Pichai as the CEO of Google.

சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதற்காக ஏகமாக எல்லோரும் ஆரவாரம் செய்கிறார்கள்.  ஏதோ அவர் கூகிள் நிறுவனத்தின் தலைமை குமாஸ்தாவாக ஆகி விட்டாராம்.  அதற்காக இந்தக் கூச்சல்.  தமிழர்களின் அடிமை மனோபாவத்தையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  சுந்தர் பிச்சை என்ன ஜாதி என்ற ஆராய்ச்சி வேறு முகநூலில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  சுந்தர் பிச்சை பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர்.  அதுதான் முக்கியம்.  ஏழைபாழைகள் படிக்கும் பள்ளிகளிலிருந்து இப்படிப்பட்ட சுந்தர் பிச்சைகள் உருவாக முடியுமா, உருவாகி இருக்கிறார்களா என்பதே என் கேள்வி.  இன்னொரு முக்கியமான கேள்வி.  சுந்தர் பிச்சைக்கு தமிழ் எழுதத் தெரியுமா?  தெரியாது என்பதே என் யூகம்.  அப்படியெனில் அவர் தமிழர் அல்ல.