நாளைய இலக்கியச் சந்திப்பு

ஒரு இலக்கியச் சந்திப்புக்குப் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.  மாலை ஐந்தரைக்குக் கூட்டம் ஆரம்பம்.  என் வழக்கப்படி ஐந்தேகாலுக்குப் போனேன்.  கூட்டம் நடத்துபவர் தனியாக அமர்ந்திருந்தார்.   ஐந்தேமுக்காலுக்கு இன்னும் இருவர் வந்தனர்.  அதில் ஒருவர் என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம்.  பிறகு ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்து விட்டு அந்த மூன்று பேருக்காக இருபது நிமிடம் பேசினேன்.  ஆறரை அளவில் ஞாநி பேசினார்.  அதற்குள் முப்பது பேர் வந்து சேர்ந்திருந்தனர்.  அப்படி ஆகி விடாமல் நாளைய கூட்டத்துக்குத் தவறாமல் வந்து விடுமாறு  நண்பர்களை அழைக்கிறேன்.

நாளைய சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒன்பது மணி விவாத மேடையில் மது விலக்கு பற்றிய கலந்துரையாடலில் பேசுகிறேன்.  பார்வையாளர்களின் கடுமையான கேள்விகளுக்கும் தடுமாறாமல் பதில் சொல்ல முடிந்தது.  மதுவை நிறுத்திய பிறகு ஏற்பட்ட புத்துணர்ச்சியே காரணம் என நினைக்கிறேன்.  நான் மது விலக்குக்கு ஆதரவா இல்லையா என்பதற்கான பதிலை அந்தக் கலந்துரையாடலில் தெரிந்து கொள்ளலாம்.

நாளைய கூட்டம் நடக்கும் இடம்:

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 15

‘இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும்’ என்ற தலைப்பில்
சாருநிவேதிதா பேசுகிறார்

…இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர்ஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 15.08.2015 (சனிக்கிழமை)

நேரம் மாலை 5 மணிக்கு*

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

* வழக்கம்போல் 6 மணிக்கு அல்லாமல, 5 மணிக்கே கூட்டம் ஆரம்பம் ஆகிறது.