சென்ற மாதம் அமிர்தம் சூர்யா தொலைபேசியில் அழைத்து கல்கி தீபாவளி மலருக்கு ஒரு சிறுகதை கேட்டார். நான் சிறுகதை எழுதி பல காலம் ஆயிற்று. எழுதுவது எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயமாகவே புலப்படுகிறது. நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும், ஜோக்கர் வாஸ் ஹியர், கர்னாடக முரசு, நேநோ போன்ற கதைகளை கல்கி தாங்காது. கல்கிக்கு சைவமாக எழுத வேண்டும். ஆளை விடுங்கள் சூர்யா என்றேன். ம்ஹும் முடியாது என்றார். எனக்கு ரொம்பவும் மறுத்துப் பேச வராது. 15-ஆம் தேதிக்குள் அனுப்புங்கள். ம், சரி. 15 தேதி வரை சூர்யாவிடமிருந்து அழைப்பு இல்லை. நானும் கதை யோசித்தேன். ஒன்றும் புலப்படவில்லை. யோசிக்க யோசிக்க நாவலாக வந்தது. இல்லாவிட்டால் ரத்தமும் சதையுமான கவுச்சி வாடை. அப்படியே விட்டு விட்டேன். 15-ஆம் தேதி வந்தது. 16, 17, 18 தேதியெல்லாம் வந்து போனது. அழைப்பு வரவில்லை. அப்பாடா என்று நிம்மதி அடைந்தேன். நம்மை மறந்து விட்டார்கள். நல்லதாயிற்று. பார்த்தால் 20-ஆம் தேதி ஃபோன். எங்கே கதை. அவசரம். இதோ எழுதிக் கொண்டே இருக்கிறேன் என்று ஒரு பொய்யைச் சொல்லி விட்டு யோசித்தேன். செம கதை மாட்டியது. சைவம் என்றால் ஜெய்ன் சைவம். நோ ஆனியன், நோ கார்லிக். ஆனாலும் கவுச்சி கதையை விட காத்திரமான, அடிவயிற்றைச் சுண்டி இழுக்கும் கதை. அசோகமித்திரனோடும் இந்திரா பார்த்தசாரதியோடும் என் கதையும் வருவதை கௌரவமாக நினைக்கிறேன்.
தீபாவளி மலரை வாங்கிப் படியுங்கள். மின்னிதழும் கிடைக்குமாம். விபரம்: