நாய்கள்

Dear Charu,
I saw your post this morning and felt very sorry for that.

My humble suggestion is that you please leave your dogs at someone else’s care first as they are the big burden for you at this stage.

Sometimes we cannot decide clearly by ourselves. You are in that situation now.

Mostly everyone’s advice would be the same.

Think about it.

Unfortunately I am living overseas and unable to find any house in Chennai at the moment.

I can only give humble suggestions.

Please take care.

Kind regards.

Venkat

அன்புள்ள வெங்கட்,

உங்கள் கடிதத்தில் என் மீதான உங்கள் பரிவும் அக்கறையும் தெரிவதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  நாய்கள் பற்றி நீங்கள் கூகிளில் தேடிப் படித்துப் பாருங்கள்.  நாய் வளர்க்கும் நண்பர்களிடமும் கேட்டுப் பாருங்கள்.  புதிய எக்ஸைல் நாவலையும் உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் பப்புவையும் ஸோரோவையும் சென்னைக்கு அருகில் உள்ள என் நண்பரிடம் கொடுத்து விட்டாள் அவந்திகா.  எனக்கு அதில் துளியும் உடன்பாடு இல்லை.  என்னுடைய மிகக் கடுமையான எதிர்ப்பையும் மீறி அதைச் செய்தாள்.  என் நண்பரிடம் 70 நாய்கள் உள்ளன.  அவர் கோடீஸ்வரர்.  மூன்று தினங்கள் சென்றன.  மூன்றாவது நாள் இரவு பத்து மணி அளவில் எனக்கு ஃபிட்ஸ் வந்து நினைவு தவறி விட்டது.  மறுநாள் காலையில் பப்புவையும் ஸோரோவையும் நேரில் பார்த்த பிறகுதான் என் நினைவு திரும்பியது.  அதாவது, மயக்கம் அடித்து விழவில்லை.  பைத்தியம் பிடித்து விட்டது.  நான் என்னென்ன செய்தேன் என்று மறுநாள் அவந்திகா சொல்லித்தான் தெரியும்.

அதேபோல் பப்புவும் ஸோரோவும் மூன்று தினங்களும் எதுவும் சாப்பிடவில்லை என்று அறிந்தேன்.

வளர்ப்பவர்களிடமிருந்து நாய்களைப் பிரித்தால் அவை உண்ணா விரதம் இருந்து செத்து விடும் என்ற உண்மையை நீங்களும் இதை வாசிப்பவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை உங்களுக்குத் தெரியுமா?  அவர் வயோதிகத்தால் இறந்த போது அவர் வளர்த்த பாமரேனியன் நாய் மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இறந்து போனது.

திருடன் மணியன் பிள்ளை என்ற நூலிலும் இதே போன்ற ஒரு சம்பவம் உள்ளது.  ஒரு நாய் திருடன் (மணியன் பிள்ளை) கொடுத்த மீனைத் தின்று அவனை வீட்டுக்குள் அனுமதித்து விட்டது.  அந்த வீடு ஒரு வெளிநாட்டுக்காரருடையது.  பல நாட்கள் கழித்து திருடன் அகப்பட்டான்.  நீதிமன்றத்தில் அவன் மீது பல திருட்டு வழக்குகள்.  நாய் வளர்த்த வெளிநாட்டுக்காரர் நீதி மன்றத்துக்கு சாட்சி சொல்ல அழைக்கப்பட்டார்.   நீதிபதியிடம் அவர் என் வீட்டில் எதுவும் திருடு போகவில்லை என்று சொல்லி விட்டார்.  எல்லாம் முடிந்து வெளியே போகும் போது திருடன் மணியன் பிள்ளையிடம் வந்து ஒரு விஷயம் கேட்கிறார்.  என்னுடைய நாய் உயர்தரமான வெளிநாட்டு நாய்.  யார் உண்ணக் கொடுத்தாலும் தொடவே தொடாது.  நீங்கள் அந்த நாய்க்கு என்ன செய்து வீட்டுக்குள்ளே சென்றீர்கள், அதுதான் எனக்குப் புரியவில்லை என்று கேட்கிறார்.

அதற்குத் திருடன் மணியன் பிள்ளை உங்கள் வீட்டுக் கிச்சனில் இருந்த மீனைக் கொடுத்தேன் என்கிறார்.  (மணியன் வாசல் வழியாக அந்த வீட்டுக்குள் போகவில்லை.  மாடிக்கு ஏணி வைத்து வந்து விட்டார். பிறகுதான் நாய் அவரைப் பார்த்திருக்கிறது.  உடனேயே அவர் அதற்கு மீனைக் கொடுத்து விட்டார்.)  அதற்கு அந்த வெளிநாட்டுக்காரர், “நீங்கள் கொடுத்த மீன் உணவுதான் அது சாப்பிட்ட கடைசிச் சாப்பாடு; அதற்கு மேல் அது எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்தே செத்து விட்டது.  திருடனை உள்ளே விட்டு விட்டாயே என்று நான் அதை ரொம்பவும் திட்டினேன்” என்கிறார்.

உலகில் உள்ள எல்லா நாய்களும் இப்படித்தான்.  தெருநாய்க்கு நீங்கள் ஒருநாள் சாப்பாடு போட்டுப் பாருங்கள்.  அதற்குப் பிறகு அதற்கும் வீட்டு நாயின் குணாம்சங்கள் ஒன்று ஒன்றாக வந்து விடும்.

மனிதர்களை விட நான் நாய்களை நேசிப்பது இந்தக் காரணத்தினால்தான்.  ஆனாலும் இனிமேல் நாய் வளர்க்க மாட்டேன்.  நாயை நேசிப்பதற்காக அதை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று இல்லை.

என் வீட்டுக்காரரிடமே போய்ப் பேசிப் பார்க்க வேண்டியதுதான்.  அதைத் தவிர வேறு வழியே இல்லை.  அவர் ஒத்துக் கொள்ளவில்லையானால்…

சாரு