நிலவு தேயாத தேசம் : 6

ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு ஆர்வத்துடன் வாசிப்பார்கள் என்றும், ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும் என்றும் இப்போதுதான் தெரிகிறது.  பல நண்பர்கள் நிலவு தேயாத தேசம் பயணக் கட்டுரையின் அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று காத்திருந்து படிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.  நன்றி.  பத்து நாள் மட்டுமே துருக்கியில் சுற்றினாலும் அந்தப் பத்து நாட்களுக்காக ஒரு ஆண்டு தீவிரமாகப் படித்தேன்.  அந்தப் படிப்பினால்தான் துருக்கி  சென்றே ஆக வேண்டும் என்று கிளம்பினேன்.  உதாரணமாக, கப்படோச்சியா பகுதியைப் பார்க்க ஒரு நாள் தான் ஆனது.  ஆனால் அதன் வரலாற்றைப் படிக்க ஒரு மாதம் ஆனது.  2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அது.  கலாட்டா டவர்… தோல்மாபாஹ்ஷி அரண்மனை…  ஒவ்வொன்றும் ஐநூறு அறுநூறு ஆண்டு வரலாற்றைச் சொல்லுகிறது.  அதற்குள் போக வேண்டியிருக்கிறது.  போனால் அங்கே ஃப்ரெஞ்சு பயணிகளின் கதைகளையும் வாசிக்க வேண்டியிருக்கிறது.  ஆட்டமன் அரண்மனையின் பாஷாவின் பெண் ஒருத்தி துருக்கியில் பெண் அடிமைத்தனம் அதிகமாக இருக்கிறது; நான் ஃப்ரான்ஸ் போகிறேன் என்று 150 ஆண்டுகளுக்கு முன்பு கிளம்பிப் போய் ஃப்ரெஞ்ச் சமூகத்தில் பெண் அடிமைத்தனம் துருக்கியை விடப் பல மடங்கு அதிகம் என்று தெரிந்து கொண்டு தலைதெறிக்க ஓடி வந்தாள்.  அவளுடைய புத்தகத்தைப் படித்தேன்.  இப்படிப் பல…

சென்ற வாரம் வந்த நிலவு தேயாத தேசம்:

குறிப்பு – இரண்டாம் வரியில் 1396 என வாசிக்கவும்.