காமெடி பீஸ் – 2

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.  நேர்காணலை காமெடி பீஸாக மாற்றிய ஒன்று, என்னுடைய தியான புகைப்படம்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது.  அதில் மெக்ஸிகோவின் நம்பர் ஒன் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களுக்கு முன்பு நின்றும் நான் போஸ் கொடுத்தேன்.  அதுதான் என்னுடைய எழுத்துக்கும் என் வாழ்க்கைக்கும் என் எழுத்தின் செய்திக்கும் உகந்ததாக இருக்கும்.  அந்தப் புகைப்படங்கள் பத்து அடி அகலமும் ஐந்தடி அகலமும் கொண்டவை.  பிரம்மாண்டமானவை.

விஷயம் என்னவென்றால், பேட்டியைப் படிக்கும் நண்பர்களுக்கு நான் ஒரு  இந்துத்துவவாதி, பஜனைமண்டலிக்காரனாக புரிந்து கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது.   பேட்டியில் உள்ள புகைப்படங்கள் அப்படியான அர்த்தத்தையே அளிக்கின்றன.  ஒரு புகைப்படத்தின் மூலம் ஒரு எழுத்தாளனை காமெடியனாக மாற்ற முடியும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.  இனிமேல் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும் என்னுடைய புகைப்படக் கலைஞரை மட்டுமே இது போன்ற பேட்டிகளில் அனுமதிப்பேன் என்றும் இன்று இப்போது இந்தத் தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இனிமேல் பத்திரிகைகளில் பேட்டி எடுத்தால் எழுதி மட்டுமே கொடுப்பேன்; பேச மாட்டேன் என்பதையும் மிகத் தீர்மானமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.