ஹூசுனின் உக்கிரம்

ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம்.  பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு.  உருதுவில் ’கஜல்’ என்று அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’.  ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.  Fuzûlî (1483 –1556) Bâkî  (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும் (ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் உஸ்மானுக்கும் (1618–1622) நெஃபியைப் பிடிக்கவில்லை.  ஆனாலும் உஸ்மானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நான்காம் முராதுக்கு (1623-1640) நெஃபியைப் பிடித்தது.  ஆனாலும் நெஃபி முராத் சுல்தானின் ஆட்சியைப் பாராட்டி எழுதி அரசனின் நற்பெயரைச் சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை.

ஒருநாள் தன்னுடைய ’ஸிஹாம்-இ காஜா’ (Arrows of Misfortune) என்ற கவிதைத் தொகுதியை எடுத்துக் கொண்டு சுல்தானைப் பார்க்க தோப்காப்பி அரண்மனைக்குச் சென்றார் நெஃபி.  (தோப்காப்பி ஞாபகம் இருக்கிறதா?) அரசனின் கையில் புத்தகத்தைக் கொடுத்த அடுத்த கணம் தோப்காப்பியின் ஒரு கோபுரத்தில் இடி விழுந்தது.  அவ்வளவுதான்.  “ஏய் சைத்தானே! ஓடிப் போ இங்கிருந்து!  பாஷா, இவன் தலையைக் கொய்து எறியுங்கள்” என்று ஆவேசமாகக் கட்டளையிட்டான் சுல்தான்.  மேலும் படிக்க இணைப்பு:

http://andhimazhai.com/news/view/charu024.html#sthash.YvhOLls3.dpuf