ஜார்ஜ் ஜோஸஃப்

அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் பட்ட அவஸ்தை அவனைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அடிமை வியாபாரத்தை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கன் என்ன பாடுபட்டு, அதுக்காகத் தன் உயிரையும் கொடுத்ததை அவன் படித்திருந்தான்.’

நாவலில் இந்த இடம் 1928-ம் ஆண்டின் நடப்புகளை விவரிக்கிறது. மேலே உள்ள பத்தியில் உள்ள ஒரு கண்ணியை கவனியுங்கள். பேசாத ’பென்ஹர்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நமக்குத் தெரிந்த பேசும் படமான ’பென்ஹர்’ வந்ததே 1959-ல். அதற்கு முன்பு இரண்டு பேசாத ‘பென்ஹர்’ வந்தன. முதல் படம் 1907-ல் Sidney Olcott-இன் இயக்கத்தில் வந்தது. அடுத்து 1925-ல் Fred Nibli ‘பென்ஹரை’ பேசாத படமாக எடுத்தார். செல்லப்பா குறிப்பிடும் படம் ஃப்ரெட் நிப்லி இயக்கிய ‘பென்ஹர்’. அது பற்றி மௌன சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை என்று சொல்வார்கள். 1,50,000 நடிகர்கள் நடித்த பிரம்மாண்டமான படம் அது.

ஜார்ஜ் ஜோஸஃப்

 

நாவலில் ஜார்ஜ் ஜோஸஃப் என்ற ஒருவர் வருகிறார். சுதந்தரப் போராட்டத்தின் காந்தி சகாப்தம் 1919 ஏப்ரல் 6-ம் தேதி ரௌலட் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எதிர்ப்பாகத் துவங்குகிறது. கடையடைப்பு, வேலை நிறுத்தம், பொதுக்கூட்டம், உபவாசம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலமாக அகில இந்திய கண்டன தினம் கொண்டாடும்பபடி ஆணையிடுகிறார் மகாத்மா. அந்த ஆணையை ஏற்று ஜார்ஜ் ஜோஸஃப் தலைமையில் சுந்தரம் பிள்ளை, கிருஷ்ண குந்து, சீனிவாச வரதன், மௌலானா சாஹேப் முதலியோர் மதுரையில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தைத் திகைக்க வைத்தனர். செல்லப்பா குறிப்பிடும் இந்தப் பிரமுகர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள். நான் ஓர் ஆய்வாளனாக இருந்தால் இவர்களின் வரலாற்றையும் தேடிப் போகவேண்டும்.  மேலும் படிக்க:

பழுப்பு நிறப் பக்கங்களில் சி.சு. செல்லப்பா பற்றிய நான்காம் பகுதி:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/04/10/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/article3371764.ece