நிலவு தேயாத தேசம் பற்றி…

அந்திமழை இணைய இதழில் நிலவு தேயாத தேசம் தொடரை அதிக நேரம் செலவிட்டு மிகவும் ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  சென்ற வார அத்தியாயத்தை எழுதும் போது அந்த அத்தியாயம் கொடுத்த உணர்வுகளால் தாக்குண்டு அதீதமான ஓர் மனநிலையில் இருந்தேன்.  அந்த அத்தியாயத்தைப் படித்த பலரும் அதே வித உணர்வை அடைந்ததாக எழுதியிருந்தார்கள்.  அது ஒரு பயணக் கட்டுரை மட்டும் அல்ல; நமது தேசத்தையும் ஐரோப்பாவையும் மேலும் அறிந்து கொள்வதற்கான ஓர் முயற்சி.

இன்று வந்த கடிதம்:

அன்புள்ள சாரு அவர்களுக்கு

//// துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். …/////
அபாரமான வரிகள்  – யோசித்துக் கொண்டே இருக்கிறேன் 
நன்றி 
மணிகண்டன்