ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100

மேற்கண்ட தலைப்பில் இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் தினமலர் சினிமா பக்கத்தில் எழுதுவேன்.  இன்று முதல் கட்டுரையின் முதல் பகுதி வந்துள்ளது.  நண்பர்கள் படிக்கவும்.  கட்டுரை விரிவான ஆய்வாக இராது.  300 வார்த்தைகளில் எந்த அளவுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு செய்திருக்கிறேன்.  பொதுவாக உலக சினிமா என்றால் அது ஹாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கிறது.  பல சினிமா கலைஞர்களின் உலக சினிமா பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் ஹாலிவுட் சினிமா.  மனப்பாடமாகவே சொல்லி விடலாம்.  காட்ஃபாதர், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், பென்ஹர், ஃபாரஸ்ட் கம்ப், இத்யாதி, இத்யாதி. இல்லாவிட்டால் அவரவர்களுக்குப் பிடித்த படங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.  குரஸவாவின் உலக சினிமா 100 என்பது அவருக்குப் பிடித்தமான நூறு சினிமா என்பதாகவே உள்ளது.  உலகின் மிகச் சிறந்த படங்களை அந்தப் பட்டியலில் காண முடியவில்லை.   இதற்கெல்லாம் மாறாக உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட ஆகச் சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்வதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.   

இன்றைய தினமலரில் முதல் கட்டுரையின் முதல் பகுதி வெளிவந்துள்ளது.