தமிழ் ஸ்டுடியோவின் B.லெனின் விருது வழங்கும் விழா – 2016 – சிறப்பு விருந்தினர் அறிமுகம்

அனுராக் காஷ்யப்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு சினிமா சார்ந்த தளங்களில் பயணிப்பவர். உலகெங்கிலும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் குரலாக ஒலிப்பவர். ஒரு திரைப்படம் எடுத்துவிட்டால் அத்துடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் பெரும்பாலான படைப்பாளிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு உலகில் நடக்கும் அதிகம் அறியப்படாத பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்திய திரைப்படம் என்றாலே அனுராக் என்கிற அளவிற்கு தன்னுடைய படங்களை எல்லா திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைத்து அதற்குரிய நியாயத்தை செய்பவர். இயக்குனராக மட்டுமே இல்லாமல், நல்ல திரைப்படங்களை தயாரித்து, நல்ல சினிமாக்கள் ஹிந்தியில் வெளிவர பெரும் உத்வேகமாக இருப்பவர். புதிய அலை இயக்குனர்கள் என்பது போல, புதிய அலை தயாரிப்பாளராக உருவெடுத்தவர்.
இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற திரைப்படத்தில் தொடங்கினார். ஆனால் அந்த திரைப்படம் இதுவரையிலும் வெளியாகவில்லை. தணிக்கை துறையே அதற்கு முக்கிய காரணம். 1993 மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தற்போது இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக, பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வீற்றிருக்கிறார். அனுராக் காஷ்யப் இதுவரையில் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் அதுவும் மாற்று சினிமா சார்ந்து இயங்கும் ஒரு இயக்கத்திற்கான கூட்டத்தில் பேசியதில்லை. அனுராக் என்ன பேசவிருக்கிறார், மறுநாள் அவரது படம் திரையிடப்பட்ட பிறகு பார்வையாளர்களோடு எப்படி கலந்துரையாடவிருக்கிறார், தெரிந்துக் கொள்ள அவசியம் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிரசாத் லேப் அரங்கில் நடைபெறும் லெனின் விருது வழங்கும் விழாவிற்கு வாருங்கள். அனுமதி இலவசம்…
——————————————————
20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு.
 
பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்) தொடர்புக்கு: 9840698236
 
சிறப்பு அழைப்பாளர்கள்:
 
அனுராக் காஷ்யப்
வ. கீதா
சாரு நிவேதிதா
லீனா மணிமேகலை
&
B. லெனின்