இரண்டு மாலை நேரங்கள் அனுராக் காஷ்யப், தமிழ் ஸ்டுடியோஸ் அருண் மற்றும் லீனா மணிமேகலையுடன் கழிந்தன. அருணின் அன்பு இல்லாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. ஏன் இத்தனை சொல்கிறேன் என்றால், இந்தியாவிலேயே நான் வெகுவாக மதிக்கும் இயக்குனர்களில் முதலில் இருப்பவர் அனுராக் காஷ்யப். அதற்குக் காரணம், நான் சினிமா எடுத்தால் அனுராக் மாதிரிதான் எடுப்பேன். தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வாஸேபூர், ராமன் ராகவ் எல்லாம் என்னுடைய படங்கள். அப்படித்தான் நினைக்கிறேன்.
தமிழ் ஸ்டுடியோஸின் செயல்பாடுகளில் கலந்து கொள்ளுங்கள் என்று நண்பர்களை எப்போதும் போல் கேட்டுக் கொள்கிறேன். ராமன் ராகவ் திரையிடலுக்குக் கட்டணம் வசூலித்திருக்கலாம். மொத்த செலவு ரெண்டு லட்சத்தையும் ஸ்பான்ஸர்கள் இல்லாமல் கைக்காசைப் போட்டுச் செய்வதெல்லாம் ரொம்பத் தப்பு. என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் மகாத்மாக்களாகவே இருப்பது எனக்கு ரொம்பவும் சிரமமாக இருக்கிறது. ஒரு Chanal 5 வாங்கிக் கொடுங்கள் என்று கேட்க முடியவில்லை பாருங்கள். அவர்கள் மகாத்மாவாக இருப்பதால் நாமும் மகாத்மாவாக நடிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் கொஞ்சம் சிரமம். அதை விட பயங்கரம் என்னவென்றால், இப்படி நடித்துக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் நாம் நிஜமாகவே மகாத்மாவாக மாறி விடுவோம். அதை நினைத்தால்தான் இப்போதே பயமாக இருக்கிறது. அருண், ப்ளீஸ், நான் மகாத்மாவாக மாறுவதற்குள் நீங்களே கொஞ்சம் சிரமம் பாராமால் இறங்கி வந்து விடுங்கள். சொச்ச காலத்தை கொஞ்சம் சொகுசாக வாழப் பிரியப்படுகிறேன். கருணை காட்டுங்கள்.
லெனின் விருது வழங்கும் விழாவில் பேசியவற்றின் தொகுப்பு கீழே. இரவு பகலாக வேலை செய்து நேற்று காலையே எனக்கு அனுப்பி விட்ட தினேஷுக்கு என் அன்பும் முத்தங்களும்…
அனுராக் காஷ்யப்: https://www.youtube.com/watch? v=v7NGqMU76zQ
சாரு நிவேதிதா: https://www.youtube.com/watch?v=_3GzYbCKG-Y
லீனா மணிமேகலை: https://www.youtube.com/watch? v=g2CB-_OREhk