செப்டெம்பர் 27, 2016
எழுத்தாளர்களெல்லாம் அடித்துக்கொள்கிறார்கள் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் யாரும் இலக்கியம் படிக்காமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என்று சொல்லி, உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்; ஒருநாள் நீங்கள் ப்ரஸீல் போகலாம் என்று ஒரு பிரபல விஞ்ஞானி எனக்கு அருள் வாக்கு சொன்னார். இன்றைய இந்துவில் வந்திருந்தது இது: இளையராஜா அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கே சிலர், ஏ.ஆர். ரஹ்மான் உங்களிடமிருந்து இசையைத் தொடர்கிறார்; அவர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க அதற்கு இசைஞானி சொன்ன பதில்:
“அவர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையே நானும் நினைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.”
மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்!