தினமலரில் ஞாயிறு தோறும் நான் ஒளியின் பெருஞ்சலனம் என்ற தலைப்பில் உலக சினிமா பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். 700 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். அது ஒரு சவால். சில வாரங்களில் ஹங்கேரிய இயக்குனர் மிக்லாஸ் யான்ஸ்கோ பற்றி எழுத இருக்கிறேன். அதற்கு Miclos Janscoவின் Jesus Christ’s Horoscope, God Walks Backwards, Hungarian Rhapsody ஆகிய படங்கள் தேவை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். பார்த்து விட்டுக் கொடுத்து விடுகிறேன். தயவுசெய்து இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும். மிக மிக முக்கியமான இயக்குனர் மிக்லாஸ் யான்ஸ்கோ.
என்னைத் தொடர்பு கொள்ள: charu.nivedita.india@gmail.com