மின்னங்காடி

செப்டெம்பர் 28, 2016

என் அன்பு நண்பர் தமிழ்மகனின் மின்னங்காடி சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துக்கள்.

***

அன்புடையீர்,

வணக்கம்.

உலகமெலாம் தமிழ் நூல்கள் கிடைக்க வேண்டும் என்ற தீரா ஆவலில் இந்தப் பெரும் பணியில் இறங்கியிருக்கிறேன். மின்னங்காடி டாட் காம் உங்கள் அனைத்து நாட்களையும் புத்தகத் திருவிழாவாக மாற்றும். அல்லும் பகலும் அங்காடி நடத்திய நாம், இந்த டிஜிடல் யுகத்திலும் கடை விரிப்போம். தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். எழுத்தாளர், நூல் பெயர், பதிப்பகப் பெயர் மூலமாகவும் நூல்களைக் கண்டெடுக்கலாம்.


இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்க ஆவன செய்யப்படும்.


கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற முடியும் என்பாருக்கும் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் அங்காடி செயல்படத் தொடங்கும்.


மின்னங்காடியை கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் சரவணன் சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதற்கான விழா, 2.10.16 மாலை ஐந்து மணிக்கு சென்னையில், உயிர்மை அலுவலகத்தில் நடைபெறும். என் மகன் வே.மாக்ஸிம், மகள் வே.அஞ்சலி இதைச் செம்மையாக செயல்படுத்துகிறார்கள்.


புத்தகத் திருவிழாவில் பங்கு பெற அழைக்கிறேன்.


அன்புடன்,
தமிழ்மகன்

http://www.minnangadi.com/