ஆண்டவன் கட்டளை

செப்டெம்பர் 27, 2016

ஆண்டவன் கட்டளை முதல் காட்சியே பார்த்தேன். ஆவணப் படம் போல் இருந்தது. மணிகண்டனுக்கு சுவாரசியமாகக் கதை சொல்லத் தெரியவில்லை. அல்லது திரைக்கதையில் பிரச்சினையா? ராஜேஷ்தான் சொல்ல வேண்டும். படு இழுவை. படு போர். காட்சிகள், கதை எல்லாம் எதார்த்தமாக இருந்தாலும் சுவாரசியமாக எடுத்துச் செல்லவில்லை என்றால் எப்படி அமர்ந்து பார்ப்பது? இடைவேளைக்கு மேல் படம் நன்றாக நகர்ந்தது என்று என்னால் எழுத முடியாது. அப்படியானால் முதல் பாதியை வெட்டி எறிந்து விடலாமா? பத்திரிகைகளெல்லாம் பாராட்டுவதைப் பார்த்தால், எல்லோருக்கும் சினிமா வேண்டாம், மாரல் சயன்ஸ் கிளாஸ் போதும் போல் தோன்றுகிறது. ராமன் ராகவ், திதி, கோர்ட் போன்ற படங்களெல்லாம் தமிழில் வரவே சாத்தியமில்லையா என்ன?