மேகா பதிப்பகம்

அக்டோபர் 4, 2016

என் அன்புப் புதல்வர் அருணாசலத்தின் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் ஆசியும்.

***

அன்புமிக்க சாரு,

தமிழ் மீது பற்றும், வாசிப்பின் மீது காதலும் கொண்டிருந்த எனது தந்தை திரு.ம.மேகராஜன், தன்னுடைய 84 வயதில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை எய்தியது தங்களுக்கும் நினைவிருக்கும்.. அந்த சமயத்தில் தங்களின் ஆறுதலான வார்த்தைகளால் எனது துக்கத்தை சிறிது சிறிதாக மறந்தேன். எனது தந்தையின் பெயரால் “மேகா பதிப்பகம்” எனும் ஒரு சிறிய பதிப்பகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன்..

நண்பர்கள் நேசமித்ரன் மற்றும் அமிர்தம் சூர்யா இருவரும், தங்களின் கவிதை தொகுப்புகளை அன்புடன் இந்த புதிய பதிப்பகத்திற்கு தருவதற்கு முழுமனதுடன் ஒப்புக்கொண்டு, அது சார்ந்த தங்களின் வேலைகளை விரைவாக செய்து வருகிறார்கள். இம்மாத இறுதிக்குள் இரண்டு புத்தகங்களும் வெளிவரும்..

தங்களை ஆதர்ஷமாக கொண்டுள்ள நான், இவ்வேளையில் உங்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.. உங்களின் எழுத்தை மதிக்கும் நான், எவ்வளவு புத்தகங்கள் பதிப்பிப்பேன் என்பதைவிட, ஒரு போதும் என்னுடைய பதிப்பகம் சார்ந்த பணிகளில் அதில் ஈடுபடும் எழுத்தாளர்களுக்கு எவ்விதமான அவமரியாதையையும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வேன் என்றும், அவர்களின் சுயமரியாதைக்கும், சுதந்திரந்திற்கும் எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாமல் நடந்து கொள்வேன் என்றும், அன்புத் தகப்பானான உங்களிடம் வாக்குத்தத்தம் அளிக்கிறேன். உங்கள் எழுத்து எனக்கு கற்பித்துள்ள “அன்பு செய்தலை” எப்போதும் தொடர்வேன் சாரு…

தங்களின் அன்பையும், ஆசிகளையும் வேண்டி….

மே.அருணாச்சலம், மதுரை.

04.10.2016.