புஞ்சை புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி

விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ‘புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2016’ நாளை துவங்குகிறது. புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் புத்தகத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். தேவிபாரதி மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

24-ஆம் தேதி மாலை புனிதா ஏகாம்பரம் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் இடம்பெறுகிறது.

25-ஆம் தேதி மாலை நிகழ்வில் எஸ். ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற லட்சுமி சரவணக்குமார் ஏற்புரை வழங்குகிறார்.

26-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா மற்றும் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் பேசுகின்றனர்.

27-ஆம் தேதி நிறைவு விழாவில் மிஷ்கின், ரோகிணி மற்றும் அஜயன் பாலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1654262