உறுமல், அலறல்…

இனிமேல் சுப்ரபாதமும் வேண்டாம்; ராஜாவும் வேண்டாம். யார் க்ரேடில் ஆஃப் ஃபில்த்தை ரசிக்கிறார்களோ அவர்களோடு மட்டுமே பழகலாம் என்று இருக்கிறேன். (எதை ரசித்தாலும் ஆண்களோடு பழகுவதாக இல்லை!)  என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்டான நிம்ஃபட்டமைனை விட நல்ல பாடல் இது.  என்ன அலறல், என்ன உறுமல்.  ரகளை.  இசை பின்னணியில் ஒலிக்க இந்தப் பாடலை நான் பாட வேண்டும் போல் ஆசையாக உள்ளது.  ஆனால் அதற்கு ரெமி மார்ட்டினை எடுக்க வேண்டும்.  ம்ஹும்.  எக்காரணம் கொண்டும் அங்கே போவதாக இல்லை.  ரெமி மார்ட்டின் இல்லாமல் இந்தப் பாடலைப் பாட வேறு வழியா இருக்கிறதா என்று தேட வேண்டும்.

இப்போது கணினி மூலம் இசை கேட்கிறேன்.  கிணற்றுக்குள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கிறது.  இசையை அதன் முழு வீச்சோடு கேட்க ஏதேனும் வழி இருக்கிறதா?  நான் இந்த டெக்னோ விஷயங்களில் பூஜ்யம்.  தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.  மேஜையில் உள்ள குவளையும் அறை பூராவும் அதிர வேண்டும்.