Porn Vs Love making – (பாகம் 1) சபரி தாஸ்

சில தினங்களுக்கு முன் ஷாலின் மரியா லாரன்ஸ் பின்வரும் முகநூல் கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்.  எழுதியவர் சபரி தாஸ்.  அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டேன்.  ஏற்காடு வாசகர் வட்டச் சந்திப்பில் கலந்து கொண்டவர் என்று சொன்னார்.  அப்போது மாணவராக இருந்தாராம்.  படித்துப் பாருங்கள்.

When Charu meets Noe- 2

Irreversible @ Zero degree

Porn Vs Love making – (பாகம் 1)

எனக்கு Gaspar Noe படங்களை பார்க்கையில் சாருவின் நினைவும் அவரது படைப்புகளும் தான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு ஒற்றுமை இருவரது படைப்புகளிலும். Zero degreeல் சாரு ஒரு இடத்தில் சொல்வார்.

‘என்னை முழுமையாக்கியவன் நேநோ. Achillesஐ முழுமையாக்கியவன் Patroculus. தாவீதை முழுமையாக்கியவன் ஜோனதன். துரியோதனனை முழுமையாக்கியவன் பீமன்”.
எனக்கு சாருவின் படைப்புகளும் கேஸ்பரின் படைப்புகளும் சேர்ந்து பார்க்கையில் அந்த முழுமை என்கிற உணர்வு தான் வருகிறது. Everything fits. Complete.

சரி. இந்த பதிவு ஏன்?? படங்களில் அதீத செக்ஸ் இருக்கும் போது அதை porn movie போல பாவித்து ஒதுக்குவதும், இலக்கியத்தில் அதீத செக்ஸ் இருக்கும்போது அதை ஆபாசமான ஒரு செக்ஸ் நாவல் போலவும் brand செய்து கொச்சைப் படுத்துவதும் தான். சாருவும் சரி, கேஸ்பரும் சரி. இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசிப்போம். கேஸ்பரின் Irreversible படத்தையும் சாருவின் zero degreeஐ உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

போர்ன் படங்களுக்கும், கேஸ்பரின் படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளுக்கும் நோக்கம் வேறு. Pornல் அழுகை இருக்காது, உணர்ச்சி இருக்காது, சண்டை இருக்காது, கோபம் இருக்காது, அதீத காதல் இருக்கது, ரத்தம் இருக்காது. எல்லாமே fantasy மாதிரி தான். நீண்ட குறிகளும், பெருத்த மார்புகளும் கொண்டு clean shave செய்த உடம்பை காட்டி செயற்கையான உறவு கொள்ளுதல். அப்படியே மேற்சொன்ன அழுகை ரத்தம் எல்லாம் இருந்தாலும் அவை simulated version. அதில் உணர்ச்சி வெளிப்பாடு இருக்காது. Porn is disrespectful to natural love making.

ஆனால் Irreversible அப்படி அல்ல. படத்தில் இரண்டு செக்ஸ் காட்சிகள் வரும். இரண்டுமே இரண்டு extremes. ஒன்று கொடூரமான ஒரு வன்புணர்வு. இன்னொன்று அழகான ஒரு லவ் மேக்கிங் கவிதை.

அந்த வன்புணர்வு காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அசைவும் கேமராவில் இருக்காது. எந்த ஒலிச்சேர்க்கையும் பின்னணியில் இருக்காது. நடக்கும் சம்பவத்தை ஒரு மூன்றாம் நபர் ஓரமாக ஒன்றும் செய்ய இயலாமல் பார்ப்பது போல அமைக்கப்பட்டு இருக்கும். இதில் ஒலியோ, வெவ்வேறு கோணங்களயோ புகுத்திவிட்டால் அது rapistன் பார்வையில் நடக்கும் சம்பவமாக பிரதிபலிக்கும். அப்போது அது ஒரு sick pornஆக மாறுகிறது. ஆனால் அவளின் கதறலும் அழுகையும் ஓலங்களும் தான் நம் இதயத்தைப் பிளக்கச் செய்யும். மேலும் அந்த tunnelல் ஒருவன் தூரத்தில் இறங்கி சம்பவத்தைப் பார்த்து பயந்து அப்படியே ஓடிவிடுவான். எல்லாமே out of focusல் இருக்கும்.இது என்னைப் பொறுத்தவரை ஒரு குறியீடு. நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை நாம் கடக்கும் விதம். சரி ,தவறு என எதையுமே அங்கு காட்சிப் படுத்தவில்லை. அவன் இறங்குகிறான். பார்த்ததும் ஓடி மறைகிறான். அவ்வளவே. Hard truth.

அடுத்து இரண்டாம் பாதியில் வரும் லவ் மேக்கிங். அவ்வளவு அழகு. கலவி முடிந்து கட்டியணைத்தபடி இருவரும் உறங்கும் காட்சியே ஒரு ஓவியம் போன்றது. எழுந்த பின் மீண்டும் அவர்கள் செய்யும் லவ் மேக்கிங் விளையாட்டுகள். எல்லாமே ஒரு கவிதை மாதிரி போல இருக்கும். அவர்களின் அன்பின் உச்சபட்ச வெளிப்பாடு தான் அந்த காட்சிகள்.

கடைசியாக, அந்த படத்தில் இந்த காட்சிகள் இடம்பெற்ற context. வெறுமனே செக்ஸ் காட்சிகளை வைக்கவில்லை. அவற்றின் நோக்கமும் நம்மை sexually arousedஆக்கவும் அல்ல. இது ஒரு வகையில் பெமினிசத்தை ஆழமாக பேசும் படம். அந்த lift, train காட்சிகள் அதற்கு உதாரணம். படுக்கையறையில் மார்க்கஸ்,

” நான் உன்னை பியரிடம் இருந்து திருடிவிட்டேன்”.

அதற்கு அலெக்ஸ், “இல்லை. திருட நான் ஒன்றும் பொருள் அல்ல. நான் ஒரு உயிர். இது நான் எடுத்த முடிவு. எனக்கு பிடித்ததால் தான் இங்கு வந்தேன். நான் யாருடன் இருக்க வேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன்”.

இன்னும் ஏகப்பட்ட வசனங்கள்.ஆனால் இங்கே அப்படியா? காதலிக்க வேண்டியது. நிராகரித்தால் ஆசிட் அடிப்பது, கையை அறுத்து கழிவிரக்கம் மூலம் காதல் கொள்ளச் செய்ய நினைப்பது, கொலையே நடக்கிறது. நீ காதலித்தாய் என்ற ஒரே காரணத்திற்காக நீ உண்மையாக அன்பு செலுத்துகிறாய் என்பதற்காக அவளும் உன்னை காதலிக்க வேண்டுமா என்ன? அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்?

இதையெல்லாமே Irreversible புரியவைக்கிறது. பிரச்சார நெடியில்லாமல், கருத்து சொல்கிறேன் என பொங்காமல் இருப்பதை இருப்பது போல் காட்டி நமக்கு புரியவைப்பது. இதில் வரும் செக்ஸ் காட்சிகளை மட்டும் பார்த்து போர்ன் என வகைப்படுத்துவது முட்டாள்தனம். படத்தை உள்வாங்க வேண்டும். அது நம்மை புரட்டி போட வேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கு மனதை கலவரப்படுத்த வேண்டும். போர்ன் அப்படியா செய்கிறது??

சாருவின் Zero degree எவ்வாறு இதே போல செக்ஸ்.. அது கையாளப்பட்ட விதம்.அதன் treatment பற்றி அடுத்த பதிவில் தொடரலாம்.

இடுப்பை காட்டி, புணர்வது போல அசைத்து ஆடுவதை பார்த்து அதற்கு U/A கொடுக்கும் தணிக்கைத்துறை, ஹராம்ஃகோர் போன்ற ஆபாசமற்ற இரு மனிதர்களுக்கிடையிலான உடல்சார் விருப்பங்களும், அது சமூகக் கட்டமைப்பில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற சிக்கலான விஷயத்தை பேசிய படத்தை தடைசெய்வதும் தான் இங்கே முரண். Irreversible போன்ற படங்களெல்லாம் இங்கே வர சாத்தியங்களே இல்லை.