ஒரு பியர் போத்தல் வாங்கிக் கொடுத்தால் பாராட்டுவார் சாரு

எனக்குப் பிடித்த பெண் பேச்சாளர் சன்னி லியோனி. இதைப் போகிற போக்கில் ஒன்றும் சொல்லிவிடவில்லை. இன்றைக்கு உலகமே அதிரும் ஆண் பேச்சாளர் கூட பேசத்தயங்கும் கட்டுடைப்பு பெண்ணிய சொற்களான ‘ஹ்ஹ்ஹாங்ய்ய்ய்ங்.. டூ இட் ஹார்ட்.. டூ இட் இன் டீப்’ போன்ற உரையாடல்களை அனாசயமாக இளம் சமூகத்தினரிடையே உரை ஆடியவர் சன்னி மட்டுமே.
ஜெகா ஜெகதீசன்.
எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர்-1
எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர் சசிகலா. அவ்வப்போது எதுனா பரிசுப் பொருள் கொரியர்ல அனுப்பிடுவாங்க. நானும் பிடிக்குதோ இல்லியோ, படிக்கிறேனோ இல்லியோ லைக் போட்டுருவேன்.
உலகத்திலேயே இந்த குவாலிட்டியோட இருக்குற பெண் எழுத்தாளர் இவர் மட்டும்தான். நான் ஏதோ போற போக்கில் அடிச்சு விடுறேன் என்று நினைக்காதீங்க. என் போஸ்ட்லாம் தொடர்ந்து படிச்சாலே இதை புரிஞ்சுக்கலாம்.
செல்வகுமார்

***
மேற்கண்ட கிண்டல்களுக்கு என் பதில்:
ஜெகா ஜெகதீசனும், செல்வகுமாரும் என்னைக் கிண்டல் செய்து எழுதியிருப்பதைப் படித்தேன். உள்முரண்கள் இருந்தால் அதை என்னிடம் தனிப்பட்ட முறையில் விவாதித்தால் அதற்கு நான் பதில் கொடுப்பேன். கருத்தைக் கூட மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொதுவெளியில் அதைப் பற்றிக் கிண்டலடிப்பது என்னை அவமானப்படுத்துவதாக உணர்கிறேன். நீர் பொதுவெளியில்தானே லுலு பற்றி எழுதினீர் என்று கேட்கக் கூடாது. ஒருவரைப் பாராட்டுவது வேறு, நீங்கள் மதிக்கும் ஒருவரைக் கீழே போட்டு மிதிப்பது வேறு. தனிப்பட்ட முறையில் வீட்டுக்குள் மிதியுங்கள், பொதுவெளியில் வேண்டாம் என்பது மட்டுமே என் வேண்டுகோள். இப்படி யாராவது என்னைக் கிண்டல் செய்திருந்தால் உடனடியாக அடுத்த நொடியே அவர்களை BLOCK செய்திருப்பேன். ஆனால் செல்வகுமார், ஜெகா என்பதால் அப்படிச் செய்யாமல் இப்படி என் நேரத்தை வீணடித்து விளக்க dick கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சசிகலா செல்வாவுக்கு கிஃப்ட் அனுப்பினால் சிறந்த பெண்ணாம். சன்னி லியோனி காமப் பிதற்றல் செய்வதால் சிறந்த பெண் —– ஆம்! ஏனய்யா, ஒருவரின் எழுத்தை சிலாகித்தால் உங்களுக்கு ஏன் சாமானில் வலிக்கிறது? லுலுவின் எழுத்தில் என்ன அசட்டுத்தனத்தைக் கண்டீர்கள்? ஏன் அது சரியில்லை, ஏன் அதைப் பாராட்டியதில் என்ன தவறு என்று என்னிடம் எடுத்துக் காட்டுங்கள், நானும் உங்களோடு சேர்ந்து லுலுவைத் திட்டுகிறேன். அதை விட்டு விட்டு விமர்சன வட்ட கபோதி dicks மாதிரி என்னைக் கிண்டல் பண்ணினால் என்னய்யா அர்த்தம்?

இந்தியா பற்றி லுலு எழுதியது போல் எந்தப் பயலும் இதுவரை எழுதியது இல்லை. நான் உட்பட. எழுதினால் என்னை உள்ளே போட்டு விடுவான். உள்ளே போட்டல் கூடப் பரவாயில்லை.\ இன்னொரு செக்ஸ் ஸ்காண்டல் விடுவான். மானபங்கப்படுத்துவான். இதோ பாருங்கள் ஜெகா, செல்வா, விவாதிப்பதாக இருந்தால் நேரடியாக விவாதியுங்கள். இருட்டுக்குள் இருந்து கல் எறிவது, என் வேட்டியைப் பிடித்து இழுத்து அம்மணமாக்குவது போன்ற மட்டமான காரியங்களில் ஈடுபடாதீர்கள். அதைச் செய்வதற்குத் தமிழ்நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

நமக்குள் விமர்சன வெளி இருக்கிறது. ஆனால் கேவலப்படுத்தாதீர்கள். நேரடியாக நின்று சண்டை போடுங்கள். நீர் எழுதியது உளறல், லுலு எழுதியது உளறல் என்று என்னிடம் நிரூபியுங்கள். என் கருத்தை மாற்றுங்கள். நான் என்ன fanatic ஆ? நேர்மையாகவும் சரியாகவும் வாதித்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவன் என்று தெரியாதா உங்களுக்கு?
மேலும் லுலுவின் குறிப்பிட்ட பகுதியை ஏன் பாராட்டுகிறேன் என்று உதாரணத்தோடு எழுதியிருக்கிறேன். என் அம்மா விபச்சாரி என்ற என் மொழிபெயர்ப்பைப் பற்றியும் சொன்னேன்.
ஒருவரைப் பாராட்டினால் வீட்டுக்குள்ளேயே செருப்படி பட வேண்டும் என்பது இப்போதுதான் தெரிகிறது. இதைப் பற்றியெல்லாம், அதாவது என் பிள்ளைகளிடமே அநியாயமாக செருப்படி வாங்குவது பற்றிய வருத்தத்துடன் என் நண்பர் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார். இனிமேல் யாரையும் பாராட்டி எழுதாதீர்கள் என்று. இதனால் லுலுவுக்கும் செம பிரச்சினை போல. அவர் மீதும் ஏகப்பட்ட கல்லடி. அறிவுரை சொன்னவருக்கு 25 வயது இருக்கும். ஒருவரைப் பாராட்டுவது அப்படிப்பட்ட கிரிமினல் குற்றமாக இந்தச் சூழல் மாற்றுகிறது. இதை ஜெகாவும் செல்வாவும் ஆரம்பிக்கிறார்கள். இல்லை, எத்தனையோ பேர் சொன்னார்கள், நாங்களும் அவர்களில் ஒருவர் என்று சொல்லாதீர்கள். எனக்கு மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை. ஜெகாவைப் பற்றிக் கூட நான் அதிகம் வருத்தப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு வருடமாக என்னிடம் தொடர்பில் இல்லை. ஆனால் வாரம் ஒருமுறை என்னோடு பேசிக் கொண்டிருக்கும் செல்வகுமாருக்கு என்னய்யா ஆயிற்று?

நான் எதை எழுதினாலும் அது tip of the iceberg மாதிரி என்று சொல்லியிருக்கிறேன். லுலு எழுதினதைப் பாராட்டிய போது அவர் எழுதிய பல பதிவுகளும் என் மனதில் வந்தது. எந்தப் பெண் எழுத்தாளர் லுலு எழுதிய பதிவுகளைப் போல் எழுதியிருக்கிறார், உரைநடையில்? சொல்லுங்கள். லுலு போடும் வெட்டிச் சண்டைகளை நான் சொல்லவில்லை. உதாரணமாக, இந்தத் தேவடியா என்ற பதிவைப் படிக்கும் ஒருவருக்கு அது லுலுவே தன் வாழ்க்கை பற்றி எழுதியது போல் தான் தோன்றும். கணவர் நிச்சயம் விவாகரத்து செய்து விடுவார். இப்படி எழுத யாருக்குய்யா துணிச்சல் இருக்கிறது, சொல்லுங்கள் ஜெகா, செல்வா அவர்களே? உன்னிப்பாகப் படித்தால்தான் லுலு பொதுவாக எழுதியிருக்கிறார் என்றே புரியும்.

உங்களுக்கெல்லாம் ஏதோ மனவியாதி இருப்பதாகவே கருதுகிறேன். ஒரு விஷயத்தைப் பாராட்டினால் இந்த அளவுக்கு என்னை இடுப்புக்குக் கீழே தாக்கி, சன்னி லியோனி, கிஃப்ட் கொடுத்த பெண் என்றெல்லாம் எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் மனம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.

இதன் மூலம் இரண்டு அரிய நட்புகளை இழக்கிறேன்; என் கையை நானே வெட்டி எறிகிறேன் என்று தெரியும். என் கையே என் கண்னைக் குத்துகிறது என்று தெரியும் போது கையை வெட்டி எறிவதில் தப்பில்லை. கை இல்லாமல் இருந்து விடலாம் கண் இல்லாமல் முடியாது. யோவ், லுலுவை கண் என்று எழுதி விட்டான் என்று அதற்கு ஒரு போஸ்ட் போடாதீர்கள். நான் கண் என்று சொன்னது, என் இலக்கிய ஆளுமையை, என் வாசிப்பை, என் ரசனையை, என் exisitence ஐ. நீங்கள் என்னைக் கிண்டல் செய்திருப்பதன் மூலம் இது அனைத்தையும் கிண்டல் செய்திருக்கிறீர்கள்.
good bye soulmates…
பின் குறிப்பு:
20 ஆண்டுகளுக்கு முன், ஒரு விமர்சகர் என்னைப் பற்றி எழுதினார். யார் ஒருவர் சாருவுக்கு பியர் வாங்கித் தருகிறாரோ அவரைப் பாராட்டி எழுதுவார் சாரு என்று. அவரை நான் அவருடைய 20 வயது மகளுக்கு எதிரே என் காலில் கிடந்த செருப்பைக் கழற்றி அடிக்கப் போனேன். அந்த ரவுடித்தனமெல்லாம் என்னிடமிருந்து போய் விட்டது. ஆனால் அந்தக் கோபம் இன்னமும் இருக்கிறது. மேற்கண்ட நண்பர்களின் கிண்டல், 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அன்பர் என்னைப் பற்றிக் கருத்து எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. முன்பு எதிரி அவமானப்படுத்தினான். இப்போது நண்பர்களே அவமானப்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றையும் பாபாவின் காலடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.
என் கோபம் தணிய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.