நீங்கள் செய்வது அராஜகம் சாரு – இடித்துரைக்கிறார் நண்பர்

நீங்கள் lulu குறித்து எழுதுவதெல்லாம் அராஜகம் சாரு. இதில் டெல்லி கணேஷ் மாதிரி வேறு ஏ… பெண்ணியமே… என்று கலங்கித் தவிக்கிறீர்கள். படிக்கும் எனக்கே கண்ணீர் வந்துவிடும் போல. நான் கவனித்தவரை lulu எழுதுவதெல்லாம் ரொம்பவும் தேய்வழக்கு. சமகாலத் தன்மையின் சாரமே அதில் கிடையாது. சகிக்க முடியாத போலித்தனம் வேறு விரவிக்கிடக்கிறது. மொத்தத்தில் ஆபாசக் குப்பை.

இந்த அவதானிப்பு என்னுடைய தவறாகக் கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. ஏனெனில், எழுத்து குறித்த அவதானிப்புகளில் உங்களது ஆதிக்கம்தானே எங்களிடம் அதிகம். நாம் நேரில் பேசும்போது இது குறித்து மேலும் விவாதிக்கலாம்.

ஜெகா, செல்வா குறித்த விஷயத்தில் நீங்கள் முக்கியமான ஒன்றைக் காணத் தவறுகிறீர்கள். உங்களிடம் இதைத் தனிப்பட்ட முறையில் சொல்லும் space அவர்களுக்கு குறைந்திருக்கிறது என்பதே அது. அப்படியா… நான் அப்படியா நடந்துகொள்கிறேன் என்று நீங்கள் கேட்டால், ஆம் என்பதே எனது பதில். அதை நீங்கள்தான் சரி செய்யமுடியும். உங்கள் மீது தீவிர அபிமானம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதுவொரு அழுத்தம். அதைக் கையாளமுடியாமல் போகிறபோதுதான், அதிலிருந்து வெளியேறுவதற்கு அதைப் பொதுவெளியில் கிண்டலாக உருமாற்றுகிறார்கள். சமூக ஊடகங்களில் தமது பிம்பம் குறித்த பதட்டத்திற்கும் இதில் பங்கிருக்கிறது.

இதன் பொருள் உங்களை அவர்கள் தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதல்ல. அவமதிக்கிறார்கள் என்பதல்ல. ஆனால் அவர்களது தொனி பிழையானது. அதன் பொருட்டு நீங்கள் காயமடைவதைப் புரிந்துகொள்கிறேன்.

இன்னொரு விஷயம் சாரு. இன்று காலை எனக்கு ஒரு நண்பனிடம் இருந்து தொலைபேசி. அவனது நண்பனுக்கு ஒரு பிரச்சினை. என்ன தெரியுமா? அவனது நண்பனுக்கு விவாகரத்து வேண்டும். மனைவியை சகிக்கமுடியவில்லை. அத்தனை சைக்கோத்தனம். அவள் எப்படி மிரட்டுகிறாள் தெரியுமா? நாம் கலவி கொண்ட விடியோ என்னிடம் இருக்கிறது. நீ என்னைவிட்டுப் போவதில் தீவிரமாக இருந்தால், நான் இதைப் பொதுவெளியில் பதிவேற்றுவேன் என்பதுதான். நீ என்ன திருட்டுத்தனமா செய்திருக்கிறாய், உன் மனைவியிடம்தானே படுத்திருக்கிறாய், அவள் பகிரட்டுமே என்ன தவறு என்று கேட்டிருக்கிறான் நண்பன். அதற்காக என் அம்மணக்குண்டி ஊருக்கே தெரிவதில் நான் பதறாமல் இருக்கமுடியுமா என்று அவன் பதிலுக்குக் கேட்டிருக்கிறான். lulu வின் எழுத்தில் நான் காண்பது இந்தப் பெண்ணின் தொனியே. அதில் பெண்ணியப் புரிதலும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை.

Cheers Charu…! love you…!