தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றால் கூட அர்த்தம் புரிந்து விடும். ஆனால் புத்திஜீவி என்றால் அப்படி ஏதும் புதியவை ஆர்கானிக் காய்கறி வந்துள்ளதா என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் ஒருவர் டி. தர்மராஜ். அவர் முகநூலில் எழுதியிருந்த இந்தச் சிறிய கட்டுரை நிர்மலா தேவி பிரச்சினையில் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்த விஷயம் என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அந்த நான்கு மாணவிகளும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப மறுத்தும் அந்த நிர்மலா தேவி அவர்களுக்குத் தூண்டில் போட்டுக் கொண்டே இருக்கிறார். பசப்பு வார்த்தைகளைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். அதில் ஒரு மிரட்டலும் கலந்து உள்ளதை யாரும் கவனித்தார்களா என்றே தெரியவில்லை. ஒட்டு மொத்த கல்விச் சூழலும் எப்படி நாறிக் கிடக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. ஒரு அன்பர் முகநூலில் எழுதியிருக்கிறார், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மட்டும் இப்படி நடக்கவில்லையா என்று. அந்தப் பதிவைப் படித்து மிகவும் வருந்தினேன். இப்படிப்பட்ட சூழலில் வாழ வேண்டியிருக்கிறதே என்று துக்கித்தேன். நிர்மலா தேவி விஷயத்தை விட இது எனக்குக் கவலை அளிக்கிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பற்றி அங்கிருந்து வரும் ஒன்றிரண்டு இந்தியர்கள் சொல்வதைத் தவிர நமக்கு என்ன தெரியும்? ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களை ஒப்பிட்டால் நம் பல்கலைக்கழகங்களைக் கக்கூஸ் என்று சொல்லலாம். ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் பேசும் ஒரு துணைவேந்தர் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் நடிகர் விக்ரமைப் பார்த்து revered vikram என்று அழைக்கிறார். இன்னொரு துணைவேந்தர் என்னைப் பார்த்து உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன் என்கிறார். 35 ஆண்டுகளுக்கு முன்னால் ஜேஎன்யூவில் ஜாக் தெரிதாவை வரவழைத்துப் பேசச் சொன்னார்கள். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கு தெரிதா யோசிக்கிறேன் என்று சொன்னார். இங்கே உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிதாவா, சாரு நிவேதிதாவே தெரியாதே!
காமரூப கதைகள் என்ற என் நாவலில் கல்லூரிகளில் நடக்கும் மறைமுக விபச்சாரம் பற்றி எழுதியிருக்கிறேன். அதில் கூட இப்படி நிர்மலா தேவி செய்தது போல் வற்புறுத்தல்கள் இருந்ததில்லை. நம் சமூகம் புழுத்து நாறி சீழ் பிடித்து புழுக்கள் வெளியேறிக் கொண்டிருப்பதற்கு நிர்மலா தேவி சம்பவம் ஒரு உதாரணம். டி. தர்மராஜும் பேராசிரியர்தான். அவரிடம் பயிலும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆய்வுத் துறையும் இப்படித்தான் புழுத்து நாறுகிறது. ஆண்களை விட பெண் பேராசிரியர்களிடம் பணியாற்றுவது இன்னும் கொடுமை என்றார் ஒரு வாசகி. உண்மைதான். அங்கே பாலியல் துன்புறுத்தல் இருக்காது. ஆனால் அடிமை போல் நடத்துவார்கள். நான் எல்லாவற்றைப் பற்றியும்தான் பேசுகிறேன். ஒருத்தன் சரியில்லை என்று வாதிட்டால் அவனும்தான் சரியில்லை என்று பதில்வாதம் செய்வது நியாயம் அல்ல. டி. தர்மராஜின் கட்டுரை கீழே: i have given his blog link: