kaala songs…

காலா பாடல்களைக் கேட்டேன். இந்த நாட்டில் ஒரு சினிமாப் பாட்டைக் கூட சினிமாப் பாட்டாக எங்கே கேட்க முடிகிறது? இத்தனைக்கும் யோகி பி, சந்தோஷ் நாராயணன் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்தான். ஆனால் காலா பாடல்கள் அனைத்தும் அரசியல் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அடங்க மறுப்போம், புரட்சி செய்வோம் என்றெல்லாம் அறை கூவல் விடுக்கின்றன. ரஜினிதான் நம்மைக் காப்பாற்றப் போகின்றவர் என்று உரக்கக் கூவுகின்றன பாடல்கள். உலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகள் அனைத்தும் இதே மாதிரியான சொல்லாடல்களைக் கொண்டுதான் வெடித்தன. ரஷ்யா, க்யூபா, சீனா, நிகராகுவா என்று பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தப் புரட்சிகரச் சொல்லாடல்கள் அனைத்தும் சரோஜாதேவி புத்தகங்களில் வரும் வார்த்தைகளைப் போல் புரட்சி சுயமைதுனத்துக்கு உதவுகின்றன. இப்படியே நம் வாழ்நாள் பூராவும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்து நாம் சாக்கடையில் உழலும் பன்றிகளைப் போலவே வாழ்வோம். ஜெய் காலா!