ஆண்டு 1981. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலே அதகளம் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு வடிவத்தில் தமிழில் எந்த நாவலுமே வந்ததில்லை என்று ஒரே ஆர்ப்பாட்டம். அதில் உண்மையில்லை. நகுலனின் நினைவுப் பாதை 1972-இலேயே வந்து விட்டது. ஆனால் நகுலன் எதைச் செய்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். சுந்தர ராமிசாமிதான் அப்போதைய ரஜினி.
என் வயது அப்போது 28. அந்த நாவல் வெளிவந்த ஒருசில தினங்களிலேயே அது பற்றிய என் மதிப்பீட்டை எழுதி சு.ரா. நடத்தி வந்த பத்திரிகைக்கே அனுப்பினேன். அவர் அதை வெளியிடவில்லை. மற்றும் பல இலக்கியப் பத்திரிகைகளும் வெளியிட மறுத்து விட்டன. அப்போது நான் வசித்த தில்லியில் தமிழ் அச்சகம் எதுவும் இல்லை. கரோல்பாகில் ஒரு கல்யாணப் பத்திரிகை அடிக்கும் ஒரு குடிசை பிரஸ் இருந்தது. தாணா அச்சகம். அங்கே போய் ஆயிரம் ரூபாய் கொடுத்து (அப்போது என் சம்பளம் 720 ரூபாய்) ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம் என்ற சிறிய நூலை ஆயிரம் பிரதிகள் அச்சடித்தேன்.
ஒரு பிரதி மூணு ரூபாயோ ரெண்டு ரூபாயோ விலை. ஆனால் ஒரு பிரதியைக் கூட விலைக்குக் கொடுத்ததில்லை. இப்போதும் கைவசம் 300 பிரதிகள் உள்ளன. (அந்தப் புத்தகத்தினால்தான் நான் இன்று வரை சு.ரா. குழுவினரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்.)
பழுப்பு நிறப் பக்கங்கள் – இரண்டாம் தொகுதியை முன்பதிவு செய்யும் முதல் 300 பேருக்கு அந்த நூலை இலவசமாக அனுப்பி வைக்க ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் முடிவு செய்துள்ளனர். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி விலை 350 ரூ. முன்பதிவுத் திட்டத்தில் 250 ரூ. அதோடு ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம் புத்தகமும் இலவசமாகக் கிடைக்கும்.
புத்தகம் முன்பதிவு செய்ய: