நான்கு மணி நேர நேர்காணல் – பகுதி 1

ஓரிரு தினங்களுக்கு முன்பு அருணின் தமிழ் ஸ்டுடியோவின் மாணவர்கள் மூன்று பேர் வந்திருந்தனர். ஒரு பேட்டிக்காக. மொத்தம் நான்கு மணி நேரம் சென்றது. இது போன்ற ஒரு பேட்டியை என் வாழ்நாளில் நான் கொடுத்ததில்லை. இனிமேலும் நடக்குமா என்று தெரியாது. ஒரே காரணம், மாணவர்கள் என் எழுத்தை அவ்வளவு ஆழ்ந்து வாசித்திருந்தனர். ஒரு உதாரணம் சொல்கிறேன். என் நண்பர்கள் எத்தனை பேருக்கு எனக்கு மிகப் பிடித்த பழம் எது என்று தெரியும்? ஆப்பிள்? சாத்துக்குடி? மாதுளை? செர்ரி? கொய்யா? ம்ஹும். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதைக் கூட விடாமல் வாசித்திருக்கிறார்கள். பேட்டிக்கு வரும் போது உங்களுக்குப் பிடித்த பழம் ஆயிற்றே என்று வாங்கி வந்தோம் என்று சொல்லி அவர்கள் கொடுத்தது நாவல்பழம். எனக்கு ஆகப் பிடித்த பழம் அதுதான். சில நண்பர்கள் அவ்வளவு பழுக்காத காயாக வாங்கி வந்து விடுவார்கள். சரியாக வாங்கத் தெரியாது. ஆனால் அருணின் மாணவர்கள் நன்கு பழுத்த பழமாக வாங்கி வந்தனர். ஒரு பெயர் ராஜேஷ். மற்றவர்கள் பெயர் மறந்து விட்டேன். மன்னிக்கவும்.

பேட்டி ஒவ்வொரு மணி நேரமாக நான்கு பகுதியாக வரும். கேட்டுப் பார்க்கவும். தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் மாணவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.