பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன் பதிவுத் திட்டம்

”என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.” இப்படியாக பழுப்பு நிறப் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இது ஏதோ அலங்கார வார்த்தைகள் அல்ல. இதை எழுதுவதற்காக என் முழு நேரத்தையும் செலவழித்தேன். அப்படிச் சொல்வது கூட சரியல்ல. இந்தப் பக்கங்கள் என் முழு வாழ்க்கையையுமே உறிஞ்சிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நூல் கொடுத்த வேலைப் பளுவின் காரணமாக இனிமேல் பழுப்பு நிறப் பக்கங்கள் நான்கின் பக்கமே போக வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இல்லாவிட்டால் என் ஆசான் நகுலன், என் mentor இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், தோப்பில் முகமது மீரான், நீல. பத்மநாபன் என்று போயிருக்க வேண்டும். பிறகு என் நாவல்களை யார் எழுதுவது என்று நிறுத்தி விட்டேன். என் வாழ்நாளின் ஆக முக்கியமான முயற்சி. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் திறவுகோல். இதற்கும் முன்பு போலவே 250 ரூ முன் பதிவுத் திட்ட விலை நிர்ணயித்திருக்கிறார்கள். ப.நி.பக்கங்கள் இரண்டாம் தொகுதி 550 பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆயிரம் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டால் புத்தகம் இன்னும் சிறப்பான முறையில் அச்சிடப்படும். பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டே தயாரிப்புத் தரத்தில் உச்சம் என்றார்கள். அதை விடவும் உச்சத்தை அடையலாம், ஆயிரம் பிரதி முன்பதிவு செய்யப்பட்டால். முன்பதிவு செய்ய, தொடர்புக்கு: