ரெண்டாம் ஆட்டம் இலவசம்…

rendaam aattam

www.amazon.in/ebook/dp/B07DCZYRB3

26 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நான் போட்ட ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொதித்து எழுந்த பார்வையாளர்கள் நாடகத்தை இயக்கிய என்னையும் நடிகர்களையும் அடித்துத் துவைத்து விட்டனர். பார்வையாளர்கள் யாரும் லும்பன் அல்ல; அவர்கள் அனைவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஆக முக்கியமாக கம்யூனிஸ்டுகள். அடி பலமாக விழுந்தது. தடுக்கப் போன கே.ஏ. குணசேகரனும் அடிபட்டார். வளாகத்தில்தானே அடிக்கக் கூடாது, வெளியே வா, அடிப்போம் என்று முப்பது பேர் வெளியே காத்திருந்தார்கள். அதற்குக் கொஞ்சம் முன்னால்தான் சஃப்தர் ஹாஷ்மி என்ற நாடக இயக்குனர் தெரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். ஹாஷ்மி கம்யூனிஸ்ட். அதனால் கருத்துச் சுதந்திரத்துக்காக இந்தியா பூராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசியதால் எனக்கு அடி.

15 பேர் கொண்ட ஒரு குழு எனக்குப் பாதுகாப்பு அளித்தது. எம்.டி. முத்துக்குமாரசாமி, வெ.மு. பொதியவெற்பன், யுவன், எஸ்.ரா. எல்லோரும்தான் அந்தக் குழு. ஒரு மணி நேரம் வெளியே போக அஞ்சி உள்ளேயே நின்று கொண்டிருந்தோம். பிறகுதான் வெளியே செல்ல முடிந்தது.

ஏன் அடி விழுந்தது? ஒரு பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வன்கலவி செய்யும் காட்சியில் பின்னணி இசையாக சுப்ரபாதத்தை ஒலிக்கச் செய்தேன். இது பற்றிய நூல் தான் ரெண்டாம் ஆட்டம். நாடகத்தின் பெயர் ரெண்டாம் ஆட்டம்.

இந்த நூல் கிண்டிலில் 99 ரூ. விலை. ஆனால் நாளை மதியம் வரை இலவசம். இதே நூல் இன்னும் பத்து தினங்களில் அல்லது அதற்கும் முன்னதாகவே ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் மூலம் hard copy ஆக வெளிவருகிறது. இப்படி புத்தகம் வெளிவர இருக்கும் போது கிண்டிலில் இலவசமாகக் கொடுத்தால் புத்தக விற்பனை பாதிக்கப்படாதா என்று ஆய்வு செய்தேன். பாதிக்கப்படாது. என் வாசகர்களாகிய உங்களை நான் நம்புகிறேன். ஹைதராபாத் அமீர்பெட்டில் ஒரு உணவகம் உள்ளது. சாப்பிட்டு விட்டு நீங்களாகப் போய் தான் காசு கொடுக்க வேண்டும். நீங்கள் பாட்டுக்கு ஜூட் விட்டால் கேட்க ஆள் இல்லை. அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் என்கிறார் ஓட்டல் முதலாளி. நான் அப்படிப்பட்டவன். சோறு சாப்பிட்டு விட்டே ஜூட் விட மனம் வராமல் காசு கொடுத்து விட்டுப் போகும் இந்த அருமையான சூழலில் ஞானத்தையா இலவசமாக வாங்குவார்கள்? வாங்கலாம். இலவசமாக டவுன்லோட் செய்து வாசியுங்கள். இரண்டு வாரம் கழித்து நூலையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். Simple. ஏனென்றால், இங்கே என்ன ஒரு புத்தகம் 2000 பிரதியா விற்கிறது? 500 பிரதி. நீங்கள் வாங்கவில்லையெனில் நானே பப்ளிஷரிடம் 500 பிரதிகளை வாங்கி என் நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவேன். நாளை மாலை வரை. அதற்குப் பிறகு 99 ரூ. இன்னும் பத்து நாளில் புத்தகமும் வரும்.

https://www.amazon.in/ebook/dp/B07DCZYRB3