கார்டியாலஜிஸ்டுகளுக்கு இனி வேலை இல்லை!

ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஆஞ்ஜைனா ஆஞ்ஜைனா என்று அனத்திக் கொண்டிருந்தேன் அல்லவா?  இப்போது ஜிம்முக்குப் போகும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது எப்படி?  கடந்த ஒரு மாதமாக ஆஞ்ஜைனா இல்லை.  இனியும் வராது.

என் இதயத்தின் ரத்தக் குழாய்களில் 50 சதவிகத அடைப்பு இருந்தது.  அதனால் சுவாசிக்க ஆக்ஸிஜன் குறையும் போது நெஞ்சு வலி ஏற்படும்.  பத்தே பத்து அடி கூட நடக்க முடியாதபடி வலிக்கும்.  காலையில் வலிக்காது.  மாலையில் வலிக்கும்.  இதற்காக ஒரு கை மருந்து சாப்பிட்டேன்.  என் வாசகி ஒருவர் சொன்னார்.  அவருடைய தந்தைக்கும் 50 சதவிகித அடைப்பு இருந்து இந்தக் கை மருந்தை சாப்பிட்டதில் இரண்டு மாதத்தில் 50 சதவிகித அடைப்பும் சரியாகி விட்டது, நம்புங்கள் என்று சொன்னார்.  நான் உடனே அவர் சொன்ன முறைப்படி வீட்டிலேயே அந்த மருந்தைச் செய்தேன்.   சில நாட்டு மருந்துகள் உள்ளன.  அசோகமரத்தின் விதையைக் கொண்டா என்பார்கள்.  இந்தக் கை மருந்தில் அந்த பயங்கரம் எல்லாம் இல்லை.  வீட்டிலேயே உள்ள விஷயங்கள்தான்.  பத்தியமும் கிடையாது.

தோழி சொன்னபடி செய்தேன்.  இதோடு 20 நாட்கள் ஆயிற்று.  அதிசயம் என்னவென்றால், முதல் நாள் மருந்திலேயே ஆஞ்ஜைனா காணோம்.  மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்டு விட்டு ஒரு நாள் மாலை 10 கி.மீ. நடந்தேன்.  ம்ஹும்.  வலியே இல்லை.  இன்னும் இரண்டு மாதங்கள் சாப்பிட்டு விட்டு ஆஞ்சியோ சோதனை செய்து பார்க்க இருக்கிறேன்.  அடைப்பு இருக்காது என்றே நம்புகிறேன்.  ஏனென்றால், அந்த அளவுக்கு உடம்பு பழைய நிலைக்கு மாறி விட்டது.

உங்களில் யாருக்காவது கொழுப்போ, அடைப்போ, இதயப் பிரச்சினையோ இருந்தால் இந்த மருந்தை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.  உண்மையில் இதைச் சாப்பிட்டால் கார்டியாலஜிஸ்டுகளுக்கு வேலையே இல்லாமல் செய்து விடலாம்.  என்னைத் தவிர வேறு சில நண்பர்களிடமும் இதை சோதித்தேன்.  இதயப் பிரச்சினை தீர்ந்து விட்டது.  ஆனால் இந்த மருந்தை உட்கொள்ளும் போது அலோபதி மருந்துகளை நிறுத்தி விடக் கூடாது.

சரி, அந்த மருந்தை எப்படிச் செய்ய வேண்டும் என்கிறீர்களா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.  பைபாஸ் சர்ஜரிக்கு 4 லட்சம் தேவை.  இனிமேல் எதையும் ஓசியில் தரக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என்னுடைய நிலவு தேயாத தேசம் (600 ரூ), பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 2 மற்றும் பாகம் 3 (இரண்டும் சேர்த்து 600 ரூ), அறம் பொருள் இன்பம் – 350 ரூ, ரெண்டாம் ஆட்டம் – 200 ரூ.  ஆகிய நூல்களை மொத்தம் 1750 ரூ. செலவு செய்து வாங்கி விட்டு  எனக்கு உடனே எழுதுங்கள்; மருந்து செய்யும் முறையை உங்களுக்கு எழுதுகிறேன்.  இனி எதுவும் என்னிடமிருந்து இலவசமாகக் கிடைக்காது, என் எழுத்தைத் தவிர…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தொடர்பு முகவரி:

Zero Degree Publishing,

Govardan Aparments,

No.47/11, Dr Ranga Road,

Mylapore,

Chennai 600004

Phone 98400 65000

E mail i.d.: zerodegreepublishing@gmail.com

Website: www.zerodegreepublishing.com