திசை அறியும் பறவைகள்

இந்தக் குறிப்பில் உள்ள இணைப்புகளைக் காண முடியாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  புரியாது.

இந்த உலகின் அதியற்புத நடனங்களில் ஒன்று, த்தாங்கோ (Tango).  த்தாங்கோவைப் பார்க்கும் போது இதற்கு இணையான நடனமே இல்லை என்று தோன்றும்.  த்தாங்கோ, ஸால்ஸா இரண்டைப் பற்றியுமே 20 ஆண்டுகளுக்கு முந்தைய என் கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  எக்ஸைல் நாவலிலும் அது உண்டு.  த்தாங்கோ அர்ஹெந்த்தினாவில் மிகப் பிரசித்தம்.  புவனோஸ் அய்ரஸின் தெருக்களிலேயே த்தாங்கோவை ஆடிக் கொண்டிருப்பார்கள்.  கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=kw76l_xhMLw

நான் கொடுக்கும் இணைப்புகளைப் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை.  ஆனாலும் ஒரு ஆத்மாவாவது பார்த்தால் திருப்தி அடைவேன்.

தென்னமெரிக்க நாடுகளில் கால்பந்தாட்டம் மாதிரியே த்தாங்கோவும் சால்ஸாவும்.  த்தாங்கோவில் பல சூப்பர் ஸ்டார்களெல்லாம் இருக்கிறார்கள்.  பின்வரும் இணைப்பில் லியனார்தோ, மிரியம் என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் த்தாங்கோ ஆடுகிறார்கள்.  அவர்களிடம் தெரியும் passion, லாகவம், கவித்துவம், gracefulness எல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை. பல இடங்களில் காற்றே ஆடுவது போல் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=NBBo81MG2k4

த்தாங்கோ இசையில் பெரும் சாதனைகளைப் புரிந்த அஸ்த்தோர் பியாஸோல்யா பற்றியும் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன்.  அந்த இசையையும் நடனத்தையும் பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=kdhTodxH7Gw

ப்ராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி நடித்த Mr and Mrs Smith என்ற படத்தில் வரும் புகழ்பெற்ற காட்சி: Tango to Evora

https://www.youtube.com/watch?v=iNfP9X22Z4c

ரிச்சர்க் கேர் மற்றும் ஜெனிஃபர் நடித்த ஷல் வி டான்ஸ் படத்தின் த்தாங்கோ:

https://www.youtube.com/watch?v=b24a_2NPleg

அந்த்தோனியோ பந்தாரேஸின் உலகப் புகழ் பெற்ற டேக் தெ லீட்

https://www.youtube.com/watch?v=6lAKlYTQVKY

இந்த த்தாங்கோ நடனங்கள் எதற்கு என்றால், நேற்று என்னுடைய திசை அறியும் பறவைகள் என்ற நூலை மறுபதிப்புக்காக பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தேன்.  15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகள்.  இந்த நூலைப் பற்றி இதுவரை ஒருத்தர் கூட என்னிடம் சிலாகித்தோ திட்டியோ சொன்னதில்லை.  படித்த போது ஒரு அதியற்புதமான த்தாங்கோ நடனத்தைப் பார்த்தது போல் இருந்தது.  ஆஹா ஆஹா இப்படியெல்லாமா நாம் எழுதியிருக்கிறோம் என்று வியந்து போனேன்.  நம் சிருஷ்டியைப் பாராட்ட யாரும் இல்லை எனில் அதன் சுவையை, இனிமையை நாமே தானே பாராட்டிக் கொள்ள வேண்டும்?

கில் பில் படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் ஒரு வாள் செய்யும் கலைஞர் வருவார்.  அவரிடம் வாள் வாங்க வரும் பெண்ணிடம் இப்போது நான் வாட்கள் செய்வதில்லையே என்பார்.  அந்தப் பெண் வாளின் தேவையைச் சொல்லும் போது அவர் செய்து தருகிறேன் என்கிறார்.  செய்து கொடுக்கும் போது வாளை அந்தப் பெண் ஒரு கையால் வாங்குவாள்.  அப்போது அந்தக் கலைஞர் இந்த வாள் வெறும் கத்தி அல்ல; இரண்டு கைகளாலும் வாங்கு என்று சொல்லி விட்டு, இந்த வாள் கடவுளே வந்தாலும் அவன் தலையை வெட்டிச் சீவி எறியும் என்பார்.

திசை அறியும் பறவை தொகுப்பு அப்படிப்பட்டது.  இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.