
இரவு பகலாக இந்த நாவலை எழுதினேன். இத்தனை தீவிரமாக, இத்தனை வேகமாக ஒரு நாவலை என் வாழ்வில் எழுதியதில்லை. ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். மொத்தம் 20000 வார்த்தைகள். அன்பு நாவலின் அடுத்த பாகம் என்று கொள்ளலாம்.
இதன் பிடிஎஃப் வடிவம் தயாரானதும் யார் யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. பெட்டியோ, அன்பு நாவல்களின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. ராஸ லீலா பாகம் ஒன்று, பாகம் இரண்டு மட்டும் பாக்கியிருக்கிறது. நான்கு மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து பதினான்கு லட்சம் தேவை. இதில் ஐந்து லட்சம் கொடுத்து விட்டேன். நான்குமே இந்தியாவின் பிரபலமான பதிப்பகத்திலிருந்து வெளிவருகிறது. ஆனாலும் மொழிபெயர்ப்புக்கு நான் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
நாவலை பதிப்பகத்தில் கொடுத்தால் இருநூறு பேர் வாங்குவார்கள். ஒரு பிரதியின் விலை இருநூறு ரூபாய் என்றால், ஒரு பிரதிக்கு ராயல்டி இருபது ரூபாய். இருநூறு இருபது நாலாயிரம் ரூபாய். அதை வைத்து என்ன செய்ய முடியும்? அதனால்தான் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் பிடிஎஃப் ஆக அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். நண்பர்கள் இந்த நாவலுக்குத் தங்களால் இயன்ற நன்கொடையை அனுப்பலாம். நாவல் புத்தகமாகவும் வரும். ஆனால் அதற்கு அதிக பட்சம் இரண்டு மாதம் ஆகும். இப்போது பிடிஎஃப் ஆகப் படிப்பவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். பெட்டியோ என் எஃப் டியில் விற்கப்பட்ட போது இரண்டு நண்பர்கள் தலா ஒரு லட்சத்து இருபதாயிரம் கொடுத்து வாங்கினார்கள். பல நண்பர்கள் பத்தாயிரம் அனுப்பி வாங்கினார்கள். சிலர் ஐம்பதாயிரம் கொடுத்தார்கள். மொத்தம் பத்து லட்சம் ரூபாய்க்கு விற்றது.
என் எஃப் டியில் பல கடினமான நடைமுறைகள் உள்ளன. அதையெல்லாம் என்னால் செய்ய இயலாது. அதனால் பிடிஎஃப் இலேயே கொடுக்க முடிவு செய்தேன். யார் யாருக்கு வேண்டுமோ எழுதுங்கள். நன்கொடை அனுப்புங்கள். இந்த நாவலை எப்போதும் போல் என் வாழ்வை பலியாக்கி எழுதியிருக்கிறேன். அன்பு நாவலின் அடுத்த பகுதி என்றாலே உங்களுக்குப் புரியும். அட்டை வடிவமைப்பு நிர்குண். நிர்குண் ஒரு அதிசய மனிதர் என்று எழுதியிருக்கிறேன். வாழும் ரஸ்புடின். நாவலை அனுப்பி பத்தே நிமிடத்தில் ஃபோனில் அழைத்து நாவலின் பல பகுதிகள் பற்றி விரிவாகப் பேசினார். சில பிழைகளையும் சுட்டிக் காட்டினார். ஏஐ யை விட சற்று நேரம் அதிகம் எடுத்துக் கொள்கிறார். அவரது மூளை அறிவியல் ஆய்வுக்குரியது என்று நினைக்கிறேன்.
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai