நான் யோசித்து முடித்த பிறகே எழுதுகிறேன். அதுவும் யோசிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி யோசிப்பதில்லை. என்னென்னவெல்லாம் எழுத வேண்டும் என்று மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவிந்திருக்கும். நேரம் கிடைக்கும் போது பேய் வேகத்தில் டைப் செய்வேன். ஒரு நொடி கூட யோசிப்பதில்லை. விரல்களில் வலி எடுக்கும் அளவு வேகத்தில் டைப் செய்வேன். கூடவே இசை ஓடிக் கொண்டிருக்கும். எப்படிப்பட்ட இசை என்று பின்வரும் இணைப்பைக் கேளுங்கள். ஆத்மாவை வருடி விடும் இசை இது…
முன்பெல்லாம் ரெகுலராக பார்க் ஷெரட்டன் போய்க் கொண்டிருந்த காலத்தில் மாலை நேரத்தில் – இந்த நேரம்தான் – லௌஞ்ஜில் ஒருவர் தனியாக அமர்ந்து அற்புதமாக பியானோ வாசித்துக் கொண்டிருப்பார். எதிரே நான் மட்டுமே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். யாராவது இருந்தாலும் ரொம்ப சீரியஸாக மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு கலைஞர் தன்னெதிரே வாசித்துக் கொண்டிருப்பதே அவர்களின் பிரக்ஞையில் இருக்காது. நான் எனக்குப் பிடித்த பாடல்களை வாசிக்கச் சொல்லி கேட்பேன். நாஸ்டால்ஜியா. இப்போது எல்லாமே கணினியில் கிடைக்கிறது. பார்க் ஷெரட்டனின் அருமையான சூழல் தான் இங்கே இல்லை…
Comments are closed.