பொதுவாக இந்தியாவில் சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது. இந்து, முஸ்லீம், கிறித்தவர் ஆகிய மூன்று சாராரிடமுமே பொதுவாக சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. நூற்றுக்கு இருபது சதவிகிதம் பேர் இந்த மதவெறியிலிருந்து தள்ளி இருக்கிறார்கள். இந்த சதவிகிதம் கூடலாம். குறையலாம். ஆனால் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் போய் விட்டது. மாற்று மதத்தினரை வெறி கொண்டு அடிக்கின்றனர். ஒரு கிறித்தவத் துறவி, சமீபத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறிய குடும்பத்தை, ‘இந்து மதத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார். இப்படிப்பட்டவர்களுக்குக் கர்த்தர் நரகத்தையே கொடுப்பார் என்று அவருக்குத் தெரியவில்லை. இந்துக்களோ, இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதம் என்று ஒன்று இருக்குமா என்று அச்சத்துடனும் பீதியுடனும் கேட்கிறார்கள். இவர்களிடம் மாற்று மதத்தினர் பற்றிய அன்பும் நேசமும் காண முடியுமா?
இதிலெல்லாம் நான் தலையிடுவதில்லை. இந்தியாவில் ரத்த ஆறு ஓடும்போது அதைப் பார்க்க நான் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்த கர்னாடக இசை பற்றிய சர்ச்சை. ஒரு விஷயம் சொல்கிறேன். நான் எழுதியது என்னுடைய உடமை. நான் மட்டுமே அதன் இண்டெலக்சுவல் உரிமையாளன். அப்படியிருக்கும் போது தியாகராஜரின் கீர்த்தனைகளை மாற்றுவதற்கு எவனுக்கும் உரிமை இல்லை. உரிமை கோருவது பச்சை அயோக்கியத்தனம். டி.எம். கிருஷ்ணா ஒரு சமூக விரோதி. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதால் அந்தச் சமூக விரோதியைக் கைது செய்ய வேண்டும். இல்லையேல் நாடு கடத்த வேண்டும். அந்த ஆள் ரோமில் போய் உட்கார்ந்து கொண்டு பஜனை செய்யட்டும். யார் வேண்டாம் என்றது?
இந்தப் பதிவின் காரணமாக நான் பிராமண அடிவருடி, இந்துத்துவா என்று நினைக்கும் அன்பர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். ஏனென்றால், பிராமணர்கள் அத்தனை பேரும் இன்று மோடிக்குக் கூஜா தூக்கிக் கொண்டு ஃபாஸிஸ்ட் ஆதரவாளர்களாக மாறியதைத் தினந்தோறும் கண்டித்து எழுதிக் கொண்டிருப்பதும் நான் தான்.