சினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை

வரும் ஞாயிறு 14.10.2018 அன்று காலை பத்து மணிக்கு ப்யூர் சினிமா அரங்கில் சினிமா ரசனை பயிற்சிப் பட்டறை நிச்சயமாக நடைபெறும். காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்தரை வரை நடக்கும். சென்ற வகுப்பில் இசை பற்றியும், கதை பற்றியும் விளக்கினேன். இந்த வாரம் ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் வசனம் ஆகியவை பற்றிப் பயிற்சி அளிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். நல்ல சினிமாவை ரசிப்பதற்கும், நல்ல சினிமாவை நாமே உருவாக்குவதற்கும் என்னுடைய 40 ஆண்டுக் கால சினிமா அனுபவம் உதவும் என்று தீவிரமாக நம்புகிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்பதிவு செய்ய 9840644916, 044 4865 5405 எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். ப்யூர் சினிமா அரங்கு வடபழனியில் சிவன் கோவில் தெருவில் உள்ளது. மற்ற விபரங்களுக்கு இதில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள். கட்டணம் ரூ. 500/-