சினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு

சாரு நிவேதிதாவின் சினிமா ரசனை பயிற்சி பட்டறை – மூன்றாவது வகுப்பு

21-10-2018, ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை.

பயிற்சிக்கட்டணம்: 500 ரூபாய்

முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405.

முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவக கட்டிடத்தின் இரண்டாவது மாடி.

நண்பர்களே சாரு நிவேதிதா, பியூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ந்து ஐந்து வாரங்கள் சினிமா ரசனை பற்றிய பயிற்சி வகுப்பெடுக்கிறார். இரண்டாவது வகுப்பு கடந்த ஞாயிறு சிறப்பாக நடைபெற்றது. மூன்றாவது வகுப்பு எதிர்வரும் ஞாயிறு காலை பியூர் சினிமாவில் தொடங்கும். இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். இறுதி நேரத்தில் பதிவு செய்வதை தவிர்த்து முன்னமே பதிவு செய்தால்தான், பயிற்சிப்பட்டறையை ஒருங்கிணைக்க ஏதுவாக யிருக்கும். எனவே நண்பர்கள் உடனே பணம் செலுத்தி அல்லது அலைப்பேசி வாயிலாக முன்பதிவு செய்துவிடுங்கள். நிறைய முறை சொன்னதுதான், தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடக்க வேண்டிய பயிற்சி, சினிமா ரசனை பற்றியது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து லட்சணக்கணக்கில் பணம் செலுத்தி சினிமாவை படிக்கும் நண்பர்கள், பிரபலங்களின் அனுபவங்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் ஸ்டுடியோ அதை விடுத்து மிக குறைந்த கட்டணத்தில் மிக முக்கிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வருகிறது. வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சினிமா, இசை, ஓவியம், இலக்கியம் என பல கலைகளையும் ஒருங்கிணைத்து நடைபெறும் இந்த பயிற்சி தமிழ்நாட்டின் முதல் முயற்சி. இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுங்கள்.