யார் அந்த ஏழு பேர்?

டாஸ்மாக் பாரில் பணியாளனாக வேலை செய்யும் 14 வயதுப் பொடியன் ஒருவனுக்கு ஏழு பேர் பற்றித் தெரியுமா? எந்த ஏழு பேர் என்றுதானே கேட்பான்? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் அந்த அளவுக்குத்தான் பொது அறிவும் அரசியல் அறிவும் உள்ளன. உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கே தலை சுத்துது என்று சொன்ன அரசியல் ஞானி அவர். அவர்ட்ட போய் ஏனய்யா இப்படியெல்லாம் கேட்டு மன உளைச்சல் பண்ணுகிறீர்கள்? விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மேனகா காந்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்காக ஒரு சட்டமே இருக்கிறது. அதேபோல் வயதான, ஒன்றும் தெரியாத அப்பாவிகளையும் துன்புறுத்தக் கூடாது என்று சட்டம் கொண்டு வாங்க மேனகா மேடம்!!!