புத்தக விழா – 4

இன்று 5-1-2019 காலை ஏழு மணிக்கு புத்தகச் சந்தைக்குப் போயிருந்தேன். சன் நியூஸ் பேட்டிக்காக. அந்தப் பேட்டி இன்று இரவு பத்து மணிக்கு சன் நியூஸில் ஒளிபரப்பாகும்.

5-1-2019 இன்று மதியம் மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் & எழுத்து பிரசுரம் அரங்கில் இருப்பேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சந்திக்கலாம். அரங்கு எண் 696 & 697. ஒரு நல்ல இங்க் பேனா தேடிக் கொண்டிருக்கிறேன். பச்சை இங்க் என்றால் உசிதம். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள Pen என்ற கடையில் கிடைக்கும். ராம்ஜி வாங்கிக் கொடுத்தது என்னிடமே இருந்தது. வீடு மாற்றியதில் எங்கோ இடம் மாறி விட்டது. நேற்றிலிருந்து அந்த இங்க் பேனா ஞாபகமாகவே இருக்கிறது. சப்பை மேட்டர். எக்ஸ்பிரஸ் அவென்யூ போனால் வாங்கி விடலாம். போக நேரம் இல்லையே? யாராவது வாங்கிக் கொடுத்தால் காசைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்வேன். நல்ல தடிமனான பெரிய பேனா என்றால் ரொம்ப இஷ்டம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இங்க் பேனாவே இஷ்டம்தான்…