புத்தக விழா – 5

தமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த ஓவிய நண்பர் ஒருவர் வரைந்தது. பெயர் மறந்து போனேன். மன்னிக்கவும். இந்தப் புகைப்படத்தை ஒரு நிதி வசூலுக்காக நேற்று வாங்கினேன். என் ஓவியத்தை நானே வைத்துக் கொள்வது அழகல்ல. உங்களில் யாருக்கேனும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com அல்லது நான் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் மதியம் 2 மணியிலிருந்து இரவு ஒன்பது வரை இருப்பேன். என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விலையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக விலை நிர்ணயிப்பவருக்கு ஓவியம். எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் என்னுடைய சீலே பயணத்துக்குத்தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன்.Portrait