ஒன்றரை லட்சம் பேர் பார்த்த அடியேனின் உரை

இந்தக் காணொளியை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை இதை நான் முகநூலில் பகிரவில்லை. முடிந்தால் கேளுங்கள். ஊடகம் என்பது எழுத்திலிருந்து பேச்சுக்கு மாறி விட்டது. இப்போது நான் ஸீரோ டிகிரியை வாசித்து அளிக்கிறேன் என்றால், அது ஒரு லட்சம் பேரைச் சென்றடையும். என் பிறந்த நாள் அன்று காலையில் கண் விழித்ததும் எனக்கு என்னவெல்லாம் தோன்றியதோ அதையெல்லாம் எழுந்து ஐந்தே நிமிடத்தில் தற்செயலாக இந்தக் காணொளியில் கேட்டேன் என்று சொன்னார் ஒரு நண்பர். அவருக்கு அதற்கு முந்தின நாள் வரை என் பெயர் தெரியாது என்பது ஒரு ஆச்சரியம். முடிந்தால் இதைக் கேட்டுப் பாருங்கள். இதைக் கேட்ட பிறகு உங்களால் இந்த உரையை வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.