எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்…

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் முதல் நாவல் பற்றி நண்பர் வினித் எழுதிய கடிதம். நாவல் சென்னை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கு எண் 696இல் கிடைக்கும்.

சாரு,

இப்போது ரயிலில் தான் சோழங்கநல்லூர் போய்க் கொண்டிருக்கிறேன். பயண நேரம் எட்டு மணி நேரம் ஆகும் என்பதால் இலக்கியங்கள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களை புத்தக விழாவில் சந்தித்த பொழுது எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வாங்கியதை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் பாலாவிற்க்கான பதில் கடிதத்தில் ஃபிரஞ்ச் புத்திஜீவிகளும் மற்றும் பொதுவுடைமைக் கட்சி எல்லாமே வெள்ளைத்தோல் மனிதர்களுக்குத் தானென்று கனல் தெறிக்கிறது. எப்பா…!எத்தனைக் கோப நெடி. ஆனால், அத்தனையும் நேர்மையின் சாரம், துளி கூட வெற்றுக் கூப்பாடோ, அர்ச்சனைகளோ இல்லை. எக்ஸைல், ராஸ லீலா… போன்ற நாவல்கள்… நாடோடியின் நாட்குறிப்புகள், கோணல் பக்கங்கள் போன்ற கட்டுரைத் தொகுதிகள் என எல்லாவற்றிலும் சமூக ஒழுங்கீனத்தை சாடாத இடத்தை, Poverty Of Culture -ஐ தெருவில் இழுத்து தொங்கவிடுவதை உள்வாங்கியே உங்களை நேசித்துப் படிக்கிறேன். ஆனால், எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், நீங்கள் கம்யூனிஸ்டாக இருந்ததாலா இல்லை இளமையின் ததும்பலாலோ, இல்லை என்னவோ… Such a volcanic eruption, I would say. நாகூரில் தான் ரயில் ஏறுவேன் சென்னை திரும்பும் பொழுது, உங்களை எண்ணியே….!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அன்புடன்,
வினித்