தலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு

ஃபேஸ்புக்கில் அடாவடியான இமேஜ் எனக்கு இருக்கலாம். ஆனால் நான் பப்ளிஷருக்கு லகுவானவன். என்னைப்போல சுலபமான எழுத்தாளர் யாரும் பப்ளிஷருக்கு கிடைப்பார்களா என்று தெரியவில்லை.

அட்டைப்படம் நானே கோ ஆர்டினேட் செய்து , வாங்கிக் கொடுத்து விடுவேன். பேஜ் செட்டும் சமயங்களில் செய்து கொடுத்து விடுவேன். அட்டைப்படம் போட்டவருக்கு காசும் நானே கொடுத்து விடுவேன். முதன் முறையாக ஜீரோ டிகிரி மட்டுமே அட்டைப் படம் போட்டவருக்கு பணம் கொடுத்தார்கள்.

மேலும் விழாவை என் சொந்த செலவில் வைத்து விடுவேன். முன்னுரை , பின்னிரை , ப்லர்ப் எல்லாம் நானே எழுதிக் கொடுத்து விடுவேன்.

பதிப்பாளர் , எழுத்தாளர் சிக்கல்களை , இங்கே ஃபேஸ்புக்கில் பஞ்சாயத்து வைத்ததில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேல் , ராயல்டி என்று வாயெடுக்கவே மாட்டேன். எந்த பப்ளிஷரிடமும் “ராயல்டி” என்ற வார்த்தையை கூட உபயோகித்ததே இல்லை.

என்ன எதிர்பார்ப்பேன்? என் புத்தகம் கிடைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

அமேசான் தவிர இதுவரை நான் யாரிடமும் ஒரு நையா பைசா ராயல்டி பெற்றதில்லை. கேட்டதுமில்லை. இது சம்மந்தமாக மெயிலோ மெசேஜோ கூட அனுப்பியதில்லை.

பிரேக் அப் குறுங்கதைகள் கிழக்கில் போட்டார்கள். இரண்டு வருடம் இருக்கும் என நினைக்கிறேன். கார்ப்பரேட் கம்பனி என்றாலும் அவர்களும் இதுவரை ராயல்டி கொடுத்தது இல்லை. அவர்களிடமும் இதுவரை ராயல்டி பெற்றதில்லை. பேப்பர் பேக் தவிர கிண்டிலிலும் பிரேக் அப் ஓடிக்கொண்டு உள்ளது. அதிலும் நான் ராயல்டி பெற்றதில்லை.

இது இப்படி இருக்க , இந்த புத்தகக் கண்காட்சியில் , பிரேக் அப் குறுங்கதைகள் ஸ்டாக் இல்லை. என்னிடம் பலர் கேட்டார்கள். இது எனக்கு வழக்கமாக நடப்பதுதான். சாரு சொல்வது போல கரக்டாக டெலிபோன் டேரக்டரியில் என் பெயர் மட்டும் மிஸ் ஆகும். ஹரன் பிரசன்னாவிடம் பேசி டைட்டிலை ஜீரோ டிகிரில போட்டுக்கறேன் என்றேன் , உடனே சம்மதித்து விட்டார். நன்றி.

15 சதவீதம் படித்திருப்பதாகவும் , நாவல் பழைய சினிமா போல இருப்பதாகவும் , மிடில என்று ஹார்ன் போஸ்ட் போட்டிருந்தார்.

ஒரு புகழ் பெற்ற நாவலுக்கு , நாவல் வெளிவருவதற்கு முன்னமே விமர்சனம் வரும், வந்தது , அதை ரசித்தேன். படிக்காமல் எழுதுவார்கள் , 10 பர்ஸண்ட் படித்து விட்டு எழுதுவார்கள் , எல்லாமே நல்லதுதான். பொண்டாட்டிக்கும் அது நடந்தது , நல்ல விளம்பரம் தான். ரசித்தேன்.

பொது ஆட்கள் எப்படி எழுதுவதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை, ஒரு புகாரும் இல்லை. ஹரன் பிரசன்னா எழுதியது மட்டும் உறுத்தியது. ஏன் என்றால் , இதே பொண்டாட்டியை நான் கிழக்கில் எழுதி இருந்தால் , அவர் இப்படி அரைகுறையாக விமர்சித்து எழுதி இருக்க முடியாது இல்லையா ? அதுவும் 15 சதவீதம் படித்து விட்டு ? அதனால் இதை நான் ரசிக்கவில்லை.

அதாவது ஒரு நடிகரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் , அடுத்த படம் வேறு தயாரிப்பாளர் என்றதும் , அதை விமர்சித்தால் எப்படி இருக்கும் ?

இதே ஹரன் பிரசன்னா , நாவலை முழுமையாக படித்து விட்டு , தெளிவாக விமர்சனம் எழுதி இருந்தால் இயல்பாக எடுத்துக்கொண்டு இருப்பேன். 15 சதவீதம் படித்து விட்டு , இந்த “மிடில “ என்பது போன்ற அவசரக் குடுக்கை மூன்றாம் தரமான விமர்சனம் தான் துணுக்குற வைக்கிறது.

இப்போதும் , இதை எழுதினால் , நான் பிரச்சனையான ஆள் என்பதான தோற்றம் உண்டாகும். என்ன நடந்தாலும் நாகரிகம் என்ற பெயரில் மூடிக்கொண்டு இருந்தால் , நாய்கொடை ஆகிவிடுவோம். அதனால் இதை எழுத நேர்ந்தது.

அராத்து