இதுவரை நான் புத்தக விழாக்களோடு என்னை சம்பந்தப்படுத்திக் கொண்டதே இல்லை. அந்தப் பக்கமே போக விரும்ப மாட்டேன். என் நூல்கள் 300 பிரதிகள் விற்கும் நிலையில் நான் ஏன் புத்தக விழா போக வேண்டும் என்றே இதுவரை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருந்தால் யோசித்துப் பாருங்கள். சென்ற ஆண்டும் இதேதான் எழுதினேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது. ஒரு நாளில் 300 பிரதிகளில் கையெழுத்திட்டேன். கடைசி நாள் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கப் போய் விட்டதால் புத்தக விழாவுக்கு வரத் தாமதமாகி விட்டது. ஆறு மணிக்குத்தான் வந்தேன். ஆறு மணியிலிருந்து ஒன்பது வரை மூன்று மணி நேரத்தில் நூறு புத்தகங்களுக்கு மேல் கையெழுத்திட்டேன்.
இதை என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக சாத்தியப்படுத்திய ராம்ஜி, காயத்ரி இருவரின் கடுமையான உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி.