தி இந்து – தீபாவளி மலர் குறித்து : செல்வகுமார் கணேசன்

வாசகர் வட்டத்தில் செல்வகுமார் எழுதியிருப்பது:
தி இந்து-தீபாவளி மலரில் சாரு எழுதிய பக்கங்கள் மட்டும் கலர் ஃபுல்லாக இருக்கு. (பின்னே, தமிழ் சினிமாவின் கதாநாயகிகளை பற்றி அல்லவா எழுதியிருக்கிறார்) நஸ்ரியாவை, த்ரிஷாவை பற்றி சாருவை தவிர வேறு எந்த முன்னணி இலக்கியவாதியும் கருத்து சொல்வார்களா என்பது சந்தேகமே. அவர்களின் கௌரவ வேடமே அதை தடுத்துவிடும்.

உ.த.எ இமயமலை பற்றி கொஞ்சமும், வரலாறு, புவியியல், ராணுவம், சுயபோகம், சாரி, சாரி, சுய அனுபவம் குறித்து அதிகமாகவும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இருபது முப்பது கட்டுரைகளை பிழிந்து மூன்று பக்கங்களில் அடைக்கும்போது ஏற்படும் விபத்துதான். கணேசன் அன்பு கவனிக்க.

இன்னும் சமகால இலக்கியவாதிகளும் எழுதியிருக்கிறார்கள். (எஸ்.ரா. காந்தியை பற்றி… ) இன்னும் சில பக்கங்களை ஒதுக்கி, இளம் எழுத்தாளர்களையும் அனுமதித்திருந்தால் முழு இலக்கிய இதழாக வந்திருக்கும். ஆனாலும் திபாவளி மலர்களிலேயே இந்து நன்றாக இருக்கிறது.