ஜெயமோகனின் ’இமாலயப்’ பொய்கள்

ஒரு கட்டுரையில் சில பிழைகள் இருப்பது சாதாரணமான விஷயம்தான்.  ஆனால் ஜெயமோகன் தனது இணைய தளத்தில் எழுதும் இமயமலைப் பயணத் தொடரில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏராளமான பிழைகளைச் செய்வதால் அவர் லே நகரை மட்டும் பார்த்து விட்டு இமயமலைப் பயணத் தொடரை எழுதி வருவதாகப்  பலரும் கருதுகிறார்கள்.  இது பற்றி நானும் ஒன்றும் கவலைப்படவில்லை.  இமயமலை ராஜஸ்தானில் இருக்கிறது என்று கூட எழுதட்டும், நமக்கென்ன என்றே இருந்தேன்.  ஆனால் பல லட்சம் பேர் படிக்கக் கூடிய தி இந்து பத்திரிகையிலும் இதே காரியத்தைச் செய்யும் போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை.  தி இந்து தீபாவளி மலரில் லேயிலிருந்து பாங்கோங் ஏரி 40 கி.மீ. தூரம் என்று எழுதுகிறார்.  உண்மையான தூரம் 175 கி.மீ.  நாங்கள் காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பி மாலை ஐந்து மணிக்கு பாங்கோங் ஏரியைச் சென்றடைந்தோம்.  அதை ஒரு மரணப் பாதை என்றே சொல்லலாம்.  த்ரீ இடியட்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி இந்த ஏரியில் தான் எடுக்கப்பட்டது.  பிழைகள் மன்னிக்கக் கூடியவை.  பொய்கள் அப்படி அல்ல.

Comments are closed.